தமிழர்களுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்! தமிழில் ட்வீட் செய்து உருகிய பினராயி விஜயன்

மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 59 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

news18
Updated: August 15, 2019, 5:05 PM IST
தமிழர்களுக்கு நாங்கள் தலைவணங்குகிறோம்! தமிழில் ட்வீட் செய்து உருகிய பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்
news18
Updated: August 15, 2019, 5:05 PM IST
தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் 6-வது நாளாக மழை நீடித்தது. குறிப்பாக மலப்புரம், கண்ணூர் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மழை வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 102 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 59 பேரை தேடும்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவுக்கு பல தரப்பினரும் பொருளாகவும், பணமாகவும் தந்து உதவிவருகின்றனர். இரு தினங்களுக்கு முன்னர் தி.மு.க சார்பில் முதற்கட்டமாக 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
Loading...


இந்தநிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்து தமிழில் ட்விட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘தமிழக சகோதர சகோதரிகளின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம். சகோதரத்துவ அன்பின் வெளிப்பாடாக திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் (@mkstalin) அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவும் வகையில் லாரிகளில் நிவரண பொருட்களை அனுப்பிவைத்தமைக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ளார்.Also see:

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...