ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் அதிரடி

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது - பினராயி விஜயன் அதிரடி

பினராயி விஜயன்

பினராயி விஜயன்

கொரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபிறகு குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் தொடங்கும் என்று அமித்ஷா கூறியிருந்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது என அம் மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநில கட்சிகளும், தேசிய கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது.

இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பியது. அற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவ தொடங்கி இருந்தது.

இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை செயல்படுத்தும் பணியை மத்திய அரசு நிறுத்திவைத்திருந்தது.

சமீபத்தில், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கொரோனா தடுப்பூசி முகாம் முடிந்தபிறகு குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் தொடங்கும் என்று கூறியிருந்தார். இது நாடு முழுவதிலும் எதிர்க்கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்த மாட்டேன் என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘கொரோனா தடுப்பூசி பணிகள் முடிந்த பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Must Read : பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுதான் நடவடிக்கை எடுக்கவேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்

குடியுரிமை திருத்தச் சட்டம் கேரளாவில் அமல்படுத்தப்படாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். சிஏஏ சட்டமாக நிறைவேற்றப்பட்ட பிறகு கேரள மாநிலத்தில், எப்படி அமல்படுத்தாமல் இருக்க முடியும் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் நான் உறுதியாகச் சொல்கிறேன், கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது” என்று கூறினார்.

First published:

Tags: Amith shah, CAA Protest, Kerala, Pinarayi vijayan