வெள்ள நிவாரணப் பணிக்கு பில் அனுப்பிய மத்திய அரசு - முதல்வர் பினராயி வேதனை

கேரள வெள்ள பாதிப்புகளிலிருந்து மாநிலத்தை மீட்க மத்திய அரசு அளிப்பதாகக் கூறிய நிதியுதவியை துரிதப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

வெள்ள நிவாரணப் பணிக்கு பில் அனுப்பிய மத்திய அரசு - முதல்வர் பினராயி வேதனை
கேரள வெள்ள பாதிப்புகளிலிருந்து மாநிலத்தை மீட்க மத்திய அரசு அளிப்பதாகக் கூறிய நிதியுதவியை துரிதப்படுத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
  • News18
  • Last Updated: November 30, 2018, 1:38 PM IST
  • Share this:
கேரள வெள்ள பாதிப்புகளின் போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டதற்காக கட்டணம் செலுத்தக்கோரி மத்திய அரசு அனுப்பிய ரசீதுகளால் கேரள நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள வெள்ள பாதிப்புகளின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட இந்திய விமானப்படைக்கு கேரள அரசு ஊதியம் அளிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் உதவிகளுக்கும் பணம் செலுத்த வேண்டும் என்பதால் கேரள நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

இதுகுறித்து பேசிய பினராயி விஜயன், “இந்திய விமானப் படை மீட்புப் பணிகளில் ஈடுபட்டதற்காக கேரள அரசிடம் 33.79 கோடி ரூபாய் கோரியுள்ளது. மேலும், மத்திய அரசின் உதவிகளுக்காக கேரளா, 290 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இதனால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. வெள்ள பாதிப்பின் போது நிதி உதவி அளிப்பதாக மத்திய அரசு அளித்த வாக்குறுதியை துரிதமாக செயல்படுத்த மத்திய அரசு முன் வரவேண்டும்” என்றார்.


இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்-க்கு பினராயி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் விரைவில் கேரளாவுக்கு 600 கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றும், இதுதொடர்பான மத்திய அரசின் கூட்டம் முடிவு வெளியிட்டபின் நிதி பரிவர்த்தனை நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், பினராயி விஜயன், “மத்திய அரசின் நிதியும் கிடைக்கவில்லை. உதவி அளிக்க வந்த ஐக்கிய அரபு அமீரக நிதியும் மத்திய அரசால் தடையானது. ஆனாலும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்க்க: 2.0 பார்க்க 3D கண்ணாடி இல்லாததால் பணத்தைத் திருப்பி அளித்த தியேட்டர் நிர்வாகம்
First published: November 30, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading