Home /News /national /

ஓணம் பண்டிகை - கேரள மக்களுக்கு பினராயி விஜயன் அறிவுரை

ஓணம் பண்டிகை - கேரள மக்களுக்கு பினராயி விஜயன் அறிவுரை

ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை

21ஆம் தேதி ஓணம் பண்டிகையின் முக்கிய தினமான ‘திருவோணம்’ நடைபெற உள்ளது.

    கேரளாவில் இன்று முதல் ஓணம் பண்டிகை தொடங்கியுள்ள நிலையில், கூட்டம் கூடாமல் பாது காப்பாக வீடுகளில் மட்டுமே பண்டிகையைக் கொண்டாடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

    கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த ஆண்டை போல இவ்வாண்டும் கேரளா மக்களின் பிரதான பண்டிகையான ‘ஓணம்’ பண்டிகையை பொது இடங்களில் கொண்டாட கேரள அரசு தடை விதித்துள்ளது.

    அத்தம் நட்சத்திர நாளான இன்று முதல் அத்த பூ கோலம் போட்டு வீடுகள், வீதிகள், கோயில்களில் கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடத் தொடங்கியுள்ளனர். இந்தப் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில், கேரளாவில் கொரொனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் கட்டுப்பாடு விதித்துள்ளது. பொது இடங்களில், கோயில்களில் அத்தப் பூ கோலம் போடவோ கூட்டம் கூடவோ தடை விதித்துள்ளது.

    ஓணம் பண்டிகை மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூன்று வாரங்களுக்கு கேரளா மாநிலத்தில் ஊரடங்கு திரும்பப் பெறுவதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி கூட்டம் கூட கூடாது என்றும், மக்கள் தங்களது வீடுகளில் பாதுகாப்பாக ஓணம் பண்டிகை கொண்டாட வேண்டும் எனவும் கேரள முதலமைச்சர் பிணராய் விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

    [caption id="attachment_411619" align="aligncenter" width="525"] பினராயி விஜயன்[/caption]

    Must Read : அரிய மரபணு நோய்: மத்திய சுகாதார அமைச்சரை அவசரமாகச் சந்தித்த 23 எம்.பி.க்கள்

    திருவோணத் திருநாள் :

    வரும் 21ஆம் தேதி ஓணம் பண்டிகையின் முக்கிய தினமான ‘திருவோணம்’ நடைபெற உள்ளது. இந்நிலையில், வழக்கமாக அத்தம் நட்சத்திர தினமான இன்று முதல் திருவோண நாள் வரை 10 நாட்கள் திருவிழா கோலம் பூண்டு காணும் கேரளா மாநிலம், இந்த ஆண்டு கொரோணா காரணமாக களை இழுத்து காணப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கேரளாவை ஒட்டியுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும், மக்கள் ஓணம் பண்டிகை கொண்டாடுவது வழக்கம். ஆனால் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக குமரி மாவட்ட மக்களும் பொதுவெளியில் கொண்டாட்டங்கள் தவிர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published:

    Tags: Onam, Pinarayi vijayan

    அடுத்த செய்தி