முகப்பு /செய்தி /இந்தியா / திருமணம் போல லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

திருமணம் போல லிவ் இன் ரிலேஷன்ஷிப்பை பதிவு செய்ய வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு..!

லிவ்-இன் உறவு

லிவ்-இன் உறவு

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் அதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டங்களும் ஏதும் கிடையாது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi |

வளர்ந்து வரும் காலத்தில் லிவ்-இன் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளாமல்  ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் உறவுகளை பதிவு செய்வதற்கான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி இந்திய உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை வழக்கறிஞர் மம்தா ராணி தாக்கல் செய்துள்ளார்

அதில், “திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்வது இந்தியாவில் சட்டப்படி குற்றம் அல்ல. ஆனால் அதை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் சட்டங்களும் ஏதும் கிடையாது. திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழும் தம்பதிகளுக்கும், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் இதுவரை உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மட்டுமே பாதுகாப்பாக இருந்து வந்துள்ளன. அதனால் சட்டப்பூர்வமான வழிமுறை மற்றும் பதிவுமுறை தேவை” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பதிவு முறை ஏதும் இல்லாத லிவ்-இன் உறவுகளில் எழும் குற்றங்களை தடுக்கவும், பொய்யான பாலியல் பலாத்கார வழக்குகளைப் பதிவு செய்வதைத் தடுக்கவும் இந்த வழிமுறை நிச்சயம் தேவை. தற்போது அவர்களது உறவு தொடர்பாக ஆதாரங்களைக் கண்டறிவது நீதிமன்றங்களுக்கு கடினமாகிறது. திருமணமாகாமல் சேர்ந்து வாழ்கிறவர்கள் தங்கள் உறவைப் பதிவு செய்கிறபோது, அதுவே முக்கிய ஆதாரமாக மாறிவிடும்.'

இதையும் படிங்க திருமணத்தை விட லிவ் இன் ரிலேஷன்ஷிப் சிறந்ததா..? சத்குரு விளக்கம்

லிவ்-இன் உறவைப் பதிவுசெய்வதன் மூலம், நீதிமன்றத்திற்கு மட்டும் அல்லாமல் லிவ்-இன் பார்ட்னர்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைக்க வழிவகுக்கும்.  திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதைப் பதிவு செய்யாமல் இருப்பது, அரசியல் சாசனம் பிரிவு 19 மற்றும் 21-ஐ மீறுவதாகும். அதனால் மத்திய அரசு இது குறித்த ஒழுங்குமுறை மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகளை உருவாக்க வேண்டும்” என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Relationship, Supreme court