முகப்பு /செய்தி /இந்தியா / காலில் கேமாரவுடன் மீனவர்களிடம் பிடிப்பட்ட புறா... உளவு பார்க்க வந்ததா என போலீஸ் விசாரணை

காலில் கேமாரவுடன் மீனவர்களிடம் பிடிப்பட்ட புறா... உளவு பார்க்க வந்ததா என போலீஸ் விசாரணை

ஒடிசாவில் பிடிப்பட்ட புறா

ஒடிசாவில் பிடிப்பட்ட புறா

காலில் கேமரா, சிப் உள்ளிட்ட கருவிகளுடன் புறா ஒன்று ஒடிசா மாநில கடற்பகுதியில் பிடிபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Odisha (Orissa), India

வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒடிசா மாநிலத்தில் பாரதீப் என்ற துறைமுக நகரம் உள்ளது. அப்பகுதியில் உள்ள கோனார்கில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கடலில் மீனவர்கள் சில நாள்களுக்கு முன்னர் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு புறா ஒன்று அவர்கள் படகில் அமர்ந்துள்ளது. அந்த புறாவின் காலில் ஏதோ கருவிகள் கட்டப்படிருந்ததும், இறகுகளில் ஏதோ சில எழுத்துக்கள் இருந்ததையும் மீனவர்கள் பார்த்துள்ளனர்.

சந்தேகம் எழவே, பீதாம்பர் பெஹரா என்ற மீனவர் அந்த புறாவை பிடித்து கடலோர காவல்படையிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் சோதித்து பார்த்ததில் அந்த புறாவின் காலில் கேமரா மற்றும் ரகசிய சிப்புகள் பொருத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

உடனடியாக உஷாரான காவல்துறையினர், கைப்பற்றிய கேமரா மற்றும் சிப்புகளை ஆய்வு செய்ய உத்தரவிட்டனர். மேலும், தடயவிய நிபுணர்கள் உதவியுடன் கருவிகளை சோதனை செய்யவும், இறகில் எழுதியிருந்த எழுத்துக்களை படிக்கவும் காவல்துறையினர் நிபுணர்களை அனுகியுள்ளனர். உளவு பார்க்க இந்த புறா அனுப்பப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் காவல்துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.

First published:

Tags: Odisha, Police