சாலையோரத்தில் சிறுநீர் கழித்த பாஜக அமைச்சர்: இணையத்தில் வைரல்

news18
Updated: February 15, 2018, 7:33 PM IST
சாலையோரத்தில் சிறுநீர் கழித்த பாஜக அமைச்சர்: இணையத்தில் வைரல்
news18
Updated: February 15, 2018, 7:33 PM IST
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சுகாதாரமான இந்தியாவை உருவாக்க முயற்சி செய்து வரும் பாஜக அரசின் அமைச்சர் ஒருவர் சாலை ஓரத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

ராஜஸ்தானில் பாஜக அரசின் சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் காளிச்சரண் சரஃப்.  இவர், தேர்தல் பணிக்காக சென்றபோது, வழியில் ஜெய்ப்பூர் அருகே காரை நிறுத்தி அங்கிருந்த சாலையோர கட்டடச் சுவரில் சிறுநீர் கழித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜெய்ப்பூர் நகரில் பொது இடங்களை அசுத்துப்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  அங்கு  பொது இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு  200 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், ஜெய்ப்பூர் நகரில், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு  பணிகள் நடத்தப்படுகின்றன.


இந்நிலையில் மாநில சுகாதார அமைச்சர் பொது இடத்தில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  எதிர்க்கட்சிகளும் விமர்சித்து வருவதால்,  முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
First published: February 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...