ஹோம் /நியூஸ் /இந்தியா /

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அவமானத்துக்கு பயந்து வீட்டை விட்டு துரத்திய குடும்பம் - ராஜஸ்தானில் அவலம்

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. அவமானத்துக்கு பயந்து வீட்டை விட்டு துரத்திய குடும்பம் - ராஜஸ்தானில் அவலம்

ராஜஸ்தான் கூட்டு பாலியல் வன்புணர்வு

ராஜஸ்தான் கூட்டு பாலியல் வன்புணர்வு

22 வயது மாற்றுத் திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு குடும்பத்தால் கைவிடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Udaipur, India

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஹிரன் மங்க்ரி காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 22 வயது மாற்றுத் திறனாளி பெண் சாலையில் சுற்றி திரிந்துள்ளார். அங்கிருந்த உள்ளூர் மக்கள் அந்த பெண்ணின் நிலை குறித்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து காவல்துறையினர் பெண்ணை மீட்டு பெண்கள் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

  வாய் பேச முடியாத அந்த பெண் காப்பகத்தில் தங்க விரும்பாமல் அங்கிருந்து தப்பிக்க திட்டமிட்டு, சுவர் ஏறி குதித்து தப்ப முயன்றுள்ளார். அப்போது பெண் கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.உடனடியாக அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது தான் அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.

  பின்னர் சைகை மொழி நிபுணரை வரவழைத்து விசாரித்த போது, அந்த பெண்ணை 4 ஆண்கள் பல்வேறு சமயங்களில் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.தொடர்ந்து பெண்ணின் பின்புலம் குறித்து விசாரித்து அவரது குடும்ப விவரத்தை காவல்துறையினர் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில், பெண்ணின் தாயை தொடர்பு கொண்டு அங்கு வரவழைத்துள்ளனர்.

  இதையும் படிங்க: வேலை வேணுமா.. 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறல் - ஆதாரங்களுடன் சிக்கிய முன்னாள் தலைமை செயலாளர்

  அப்போது தான் மேலும் அதிர்ச்சிக்குரிய உண்மை தெரியவந்துள்ளது. அந்த பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான விஷயம் குடும்பத்தினருக்கு ஏற்கனவே தெரியும் என்றும் ஆனால் அவமானத்திற்கு பயந்து இதை வெளியே தெரிவிக்காமல் பெண்ணையும் வீட்டில் சேர்க்காமல் வீட்டை விட்டு வெளியே அனுப்பியதாக வாக்குமூலம் தந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Gang rape, Rajasthan, Rape