இந்தியாவில் மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட 300 பேரின் செல்போன் உரையாடல்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் - குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு மறுப்பு..

மாதிரிப்படம்

முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடலும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 • Share this:
  இந்தியாவில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னணி ஊடகவியாளர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஒ. என்ற நிறுவனம் உளவு பார்க்கும் பெகாசஸ் என்ற மென்பொருள்களை பல்வேறு நாடுகளுக்கு விற்பனை செய்து வருகிறது. அந்த மென்பொருள் மூலம், செல்போனில் பகிரப்படும் தகவல்கள், உரையாடல்களை உளவு பார்க்க முடியும். இந்நிலையில், இந்த மென்பொருள் மூலம் இந்தியாவில் உள்ள சிலரின் செயல்பாடுகள் மற்றும் ரகசியங்களை கண்காணிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

  இதில், இந்தியாவில் உள்ள இரு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சித் தவைர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்ககளின் செல்போன் உரையாடல், தகவல் பறிமாற்றங்களை கண்காணித்ததாக கூறப்படுகிறது. மேலும், முன்னணி ஊடகங்கள் மற்றும் அதன் செய்தி ஆசிரியர்கள், செய்தியாளர்களின் செல்போன் உரையாடலும் சட்டவிரோதமாக கண்காணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  அத்துடன், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட இந்தியாவில் 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதும் பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் அம்பலமாகியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் எழுப்பலாம் என்றும் இவ்விவகாரம் பூதாகரமாக வெடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதனிடையே, இந்தியாவில் அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியாளர்களின் செல்போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக்கேட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் தங்களது வாடிக்கையாளர்கள் வெவ்வேறு காரணங்களுக்கு அவற்றை பயன்படுத்தியிருக்கக் கூடும் என்றும் பெகாசஸ் மென்பொருள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. விளக்கம் அளித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: