பாஜக ஒரு இந்து ஆதரவு உயர்சாதிக் கட்சி: முனைவர் பட்ட ஆய்வுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி எழுப்பிய ஆட்சேபணை

சுப்ரமணியன் சுவாமி

சுப்பிரமணிய சாமி பிரதமர் மோடியின் பார்வைக்கு இதனைக் கொண்டு சென்ற போது, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும், ‘இன ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சிகள்’ என்றும் பாஜக ’இந்து ஆதரவு உயர்சாதி கட்சி’ என்றும் இந்த ஆய்வுரைகள் கூறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

 • Share this:
  அகமதாபாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட், ஐஐஎம் என்ற மதிப்பு மிக்க கல்வி நிறுவனத்தின் கடந்த ஆண்டு முனைவர் பட்ட ஆய்வுகள் இரண்டு கடும் சிக்கல்களுக்கு ஆளாகி அதற்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சேபம் எழுப்பி பிரதமர் நரேந்திர மோடி பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளார்.

  இதனையத்து ஐஐஎம் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் எரோல் டிசவ்சாவுக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளதாக முன்னணி ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

  தேர்தல் ஜனநாயகம் குறித்து 3 கட்டுரைகள் அடங்கிய பி.எச்டி ஆய்வுரையாகும் அது. இதற்கான அனுமதியை இயக்குநர் டிசவ்ஸா வழங்கியுள்ளார். சுப்பிரமணியசாமி இதனை கவனத்துக்குக் கொண்டு வர கல்வி அமைச்சகம் தீசிஸின் நகலைக் கேட்டு ஐஐஎம்-க்கு எழுதியுள்ளது.

  சுப்பிரமணிய சாமி பிரதமர் மோடியின் பார்வைக்கு இதனைக் கொண்டு சென்ற போது, பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும், ‘இன ரீதியாக உருவாக்கப்பட்ட கட்சிகள்’ என்றும் பாஜக ’இந்து ஆதரவு உயர்சாதி கட்சி’ என்றும் இந்த ஆய்வுரைகள் கூறுவதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

  மேலும் சுப்பிரமணிய சாமியின் ஆட்சேபணை என்னவெனில் பிரதமர் மோடி உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் அல்ல என்பதே. இந்த மாதிரி பாஜக ஒரு உயர்சாதி கட்சி, இனமேட்டிமைக் கட்சி என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்றும் இந்த மாதிரி பிரச்சாரம் ஏன் செய்கிறார்கள் என்றால் இந்தியா ஒரே நாடல்ல, இந்திய சமூகம் ஒன்றுபட்டதல்ல என்பதைக் காட்ட இவ்வாறு வரலாற்றாசிரியர்கள் கூறி வருகின்றனர் என்றும் சுப்பிரமணிய சாமி குற்றம்சாட்டியுள்ளார்.

  ஆகவே இத்தகைய ‘முன் அனுமானங்களைக் கொண்ட’ முனைவர் பட்ட ஆய்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்து நடுநிலையான பேராசிரியர்கள் மூலம் மறு ஆய்வுக்குட்படுத்த வெண்டும் என்கிறார் சுப்பிரமணிய சாமி.

  ஐஐஎம் ஒரு தன்னாட்சி உரிமை பெற்ற கல்வி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: