Home /News /national /

PFI அமைப்பினர் பந்த்.. கலவரம்.. கல்வீச்சு.. பேருந்துகள் உடைப்பு.. கேரளாவில் பதற்றம்

PFI அமைப்பினர் பந்த்.. கலவரம்.. கல்வீச்சு.. பேருந்துகள் உடைப்பு.. கேரளாவில் பதற்றம்

கேரளா பந்த்

கேரளா பந்த்

Popular Front of India raid | கேரளாவில் நடைபெற்ற முழு அடைப்பில் பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு மீது நடத்தப்பட்ட சோதனைக்கு கண்டனம் தெரிவித்து கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தில் பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சம்பவம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் நேற்று சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர். கேரளாவில் பந்த்தை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது  பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதால் அந்த மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள அரசுப்பேருந்துகள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இதன்காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி பேருந்துகளை ஓட்டுநர்கள் இயக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

இதனையடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, வழக்கமாக கேரளாவுக்கு இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதே போல கேரளாவில் இருந்து கோவைக்கு பெரும்பாலான கேரள மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஒரு சில கேரள பேருந்துகள் மட்டுமே கோவைக்கு இயக்கப்படுகிறது. இந்த தீடீர் பந்த் காரணமாக தினமும் கேரளா சென்று வரும் பொது மக்களும், அரசு ஊழியர்களும் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையும் படிங்க: முஸ்லீம்களை குறிவைத்து வேட்டையாடுகிறது உ.பி.அரசு- ஓவைஸி தாக்கு

கோவையிலிருந்து கேரள எல்லையான வாளையார் வரை நகர பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது. கேரளா செல்பவர்கள் வாளையார் வரை சென்று பின்னர் அங்கிருந்து ஆட்டோ, ஜீப் மூலம் கேரளாவுக்குள் சென்று வருகின்றனர். மாநில எல்லைகளில் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து தடைப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.
Published by:Arunkumar A
First published:

Tags: Kerala, NIA

அடுத்த செய்தி