ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டம் : அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சதி திட்டம் : அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு

மாதிரி படம்

மாதிரி படம்

பயங்கரவாத தாக்குதல்களுக்காக பல ஆண்டுகளாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

  நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய இடங்களில் நேற்றுமுன்தினம் சோதனை நடத்தப்பட்டது. கேரளாவில் நடைபெற்ற சோதனையின்போது அந்த அமைப்பின் உறுப்பினர் ஷபீக் பயேத் கைது செய்யப்பட்டார். அவர் மீதான விசாரணை அறிக்கையின்படி, பீஹார் மாநிலம் பாட்னாவிற்கு கடந்த ஜூலை மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி சென்றிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: தீவிரவாத அமைப்புகளில் இளைஞர்களை சேர ஊக்குவிப்பு : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது என்ஐஏ பரபரப்பு குற்றச்சாட்டு!

  மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக ஒரு பயிற்சி முகாமை ஏற்பாடு செய்து இருந்ததாகவும், பயங்கர ஆயுதங்களை சேகரித்து வைக்க திட்டமிட்டு இருந்ததாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களுக்காக பல ஆண்டுகளாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேலும், ஷபீக் பயேத் கத்தாரில் வசித்தபோது, இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக அவரது வங்கிக்கணக்கில் இருந்து பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Enforcement Directorate, NIA, Patna, PM Modi