முகப்பு /செய்தி /இந்தியா / 22,000 லிட்டர் பெட்ரோல்.. லைட்டரால் தீப்பற்றிய டேங்கர் லாரி - உயிரிழந்த 11 பேர்!

22,000 லிட்டர் பெட்ரோல்.. லைட்டரால் தீப்பற்றிய டேங்கர் லாரி - உயிரிழந்த 11 பேர்!

பெட்ரோல் டேங்க் லாரி விபத்து

பெட்ரோல் டேங்க் லாரி விபத்து

கவிழ்ந்து கிடந்த லாரி அருகே லைட்டரை பற்றவைத்த நபரால் தீப்பற்றியுள்ளது

  • Last Updated :
  • Mizoram, India

மிசோரமில் ஐஸ்வால் அருகே உள்ள துய்ரியல் பகுதியில் சனிக்கிழமை பெட்ரோல் ஏற்றிச் சென்ற எண்ணெய் டேங்கர் தீப்பிடித்ததில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர் என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

22,000 லிட்டர் பெட்ரோலை ஏற்றிக்கொண்டு எண்ணெய் டேங்கர் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள சம்பை நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​ஐஸ்வால் நகருக்கு கிழக்கே 18 கிமீ தொலைவில் உள்ள துய்ரியல் விமான நிலையம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாலை 4.30 மணியளவில் நெடுஞ்சாலையில் விபத்துக்குள்ளாகிய பெட்ரோல் டேங்க் லாரி சாலையில் கவிழ்ந்து கிடந்துள்ளது. கவிழ்ந்த லாரியில் இருந்து கசிந்த பெட்ரோலை உள்ளூர்வாசிகள் எடுக்கும்போது, மாலை 6 மணியளவில் டேங்கரில் தீப்பிடித்தது,

இதையும் படிங்க: 250 பெண்களை மணக்க குவிந்த 14,000 ஆண்கள்.. கர்நாடகாவில் நடைபெற்ற வரன் பார்க்கும் நிகழ்வு

இதில் ஒரு பெண் மற்றும் 74 வயது முதியவர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர், 18 பேர் தீக்காயம் அடைந்தனர். காயமடைந்த 18 பேரில் மேலும்  7 பேர் உயிரிழந்தனர். காவல்துறை துணை ஆய்வாளர், லால்பியாக்தங்கா கியாங்டே தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் ஐஸ்வாலில் உள்ள மூன்று மருத்துவமனைகளிலும், அருகிலுள்ள சைட்சுல் மாவட்டத்தில் உள்ள திங்சுல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு டாக்சி மற்றும் மூன்று இரு-சக்கர வாகனம்) முற்றாக தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவத்திற்குப் பிறகு சனிக்கிழமை இரவு முதல்வர் ஜோரம்தங்கா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர் ரோமாவியா ராய்ட் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

top videos

    விசாரணையில் சாலையின் நடுவில் நின்று கவிழ்ந்து கிடந்த லாரி அருகே லைட்டரை பற்றவைத்த நபர் கண்டுபிடிக்கப்பட்டார். அந்த நபர் இது கவனக்குறைவாக நடந்ததாக நவம்பர் 2ஆம் தேதி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். குற்றவாளி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார் என்று மிசோரம் காவல்துறை தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Fire accident, Mizoram