• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல் விலை குறைப்பு- தமிழகத்தை பின்பற்றுங்கள்: சித்தராமையா

பெட்ரோல் விலை குறைப்பு- தமிழகத்தை பின்பற்றுங்கள்: சித்தராமையா

சித்தராமையா

சித்தராமையா

தமிழ்நாட்டில் பெட்ரோலின் விலை ரூ.3 குறைக்கப்பட்டது போல் தங்கள் மாநிலத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தை போன்று கர்நாடகாவிலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.  அதன்படி பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  பெட்ரோலின் விலை 100 ரூபாயை கடந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5ம் டீசல் விலை ரூ.4ம் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  நேற்றைய பட்ஜெட் கூட்டத் தொடரில்  2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  பெட்ரோல் மீதான வரியில் ரூ.3 குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

    மேலும் படிக்க: ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு நாடு முழுவதும் தடை!


    இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தில் பெட்ரோலின் விலை ரூ.100 கீழ் சென்றுள்ளது. தமிழக அரசின் இந்த குறைப்புக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், தங்கள் மாநிலங்களிலும் இதை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிக்க: NBA அமைப்பின் பெயர், செய்தி ஒளிபரப்பாளர்கள் மற்றும் டிஜிட்டல் சங்கம் என்று மாற்றம்






    கர்நாடக முன்னாள் முதல் அமைச்சரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ. 3 குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் கர்நாடகத்திலும் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: