ஹோம் /நியூஸ் /இந்தியா /

வரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...! இன்றைய விற்பனை விலை என்ன?

வரி விதிப்பால் உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை...! இன்றைய விற்பனை விலை என்ன?

கோப்புப் படம்

கோப்புப் படம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

  • News18
  • 2 minute read
  • Last Updated :

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதால் நள்ளிரவு முதல் விலையேற்றம் அமலுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான சிறப்பு கலால் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கப்படுவதாக அறிவித்தார். தற்போது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் கலால் வரியை உயர்த்த வேண்டியநிலை உருவாகியுள்ளது என்றார்.

இது குறித்து அவர் கூறுகையில், “  சிறப்பு கூடுதல் உற்பத்தி மற்றும் சாலை வரியாக ஒரு ரூபாயும், உள்கட்டமைப்பு செஸ் வரியாக ஒரு ரூபாயும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்படும்” என்றார்.

நிர்மலா சீதாராமன்

இதன்படி நள்ளிரவு முதல் பெட்ரோல், டீசல் மீதான விளையேற்றம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் டீசலின் விலை 2 ரூபாய் 30 காசுகளும், பெட்ரோலின் விலை 2 ரூபாய் 50 காசுகளும் அதிகரித்துள்ளது.

மாநில அரசின் வாட் வரிகளுடன் சேர்த்து சென்னையில் நேற்று விற்பனை செய்யபட்ட பெட்ரோல் விலை 73.24 ரூபாயில் இருந்து இருந்து 2.55 ரூபாய் விலை உயர்த்தபட்டு 75.79 ரூபாய் என விற்பனை செய்யபடுகிறது.

ரூ. 68.01 என நேற்று விற்பனை செய்யப்பட்ட டீசல் , இன்று இந்த விலை உயர்வு மூலம் வாட் வரிகளுடன் ரூ.70.51 பைசா என இன்று விற்பனை செய்யபடுகிறது.

இந்த பெட்ரோல் , டீசல் விலை உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அனைத்து பொருட்களும் விலை உயர வாய்ப்பு இருப்பதால், விலை குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...  வரி விதிப்பு எவ்வாறு கையாளப்படுகிறது? புறநானூறு கூற்றை தமிழில் பேசி அவையை கலகலக்க வைத்த நிர்மலா


அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Fuel Price, Minister Nirmala Seetharaman, Petrol Diesel Price hike