• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ஏப்ரலில் பெட்ரோல், டீசல் விலை உயரும்...! காரணம் இதுதான்...

ஏப்ரலில் பெட்ரோல், டீசல் விலை உயரும்...! காரணம் இதுதான்...

பெட்ரொல்ல்

பெட்ரொல்ல்

  • Share this:
    மேம்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் விற்பனைக்கு வருவதால் ஏப்ரல் மாதம் பெட்ரோல் விலை உயரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    ஏப்ரல் மாதம் முதல் பாரத் ஸ்டேஜ் - சிக்ஸ் எனப்படும் பிஎஸ்-6 மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்ட பெட்ரோல், டீசலே விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மேம்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசலால் வாகனங்கள் ஏற்படுத்தும் புகை மாசு குறையும்.

    தற்போது தயாரிக்கப்படும் கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டதாகவே சந்தைக்கு வருகின்றன. விற்கப்படும் பெட்ரோல், டீசலில் சல்பர் 50 பிபிஎம் அளவு உள்ள நிலையில், தரம் உயர்த்தப்பட்ட புதிய பெட்ரோல், டீசலில் அது 10 பிபிஎம்-ஆகக் குறையும். அத்தோடு, வாகன புகையில் நைட்ரஜன் ஆக்சைடு வாயு வெளியாவதை டீசல் கார்களில் 70% அளவுக்கும், பெட்ரோல் கார்களில் 25% அளவுக்கும் இந்த மேம்படுத்தப்பட்ட எரிபொருள் குறைக்கும்.

    இதற்காக, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்த, எண்ணெய் நிறுவனங்கள் சுமார் 35,000 கோடி ரூபாயை செலவிட்டு வருகின்றன. அதனால், ஏப்ரல் மாதம் இந்த வகை பெட்ரோல், டீசல் நாடு முழுவதும் விற்பனைக்கு வரும்போது விலை கணிசமாக உயரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, இந்தியன் ஆயில் நிறுவனம் 50 காசுகள் முதல் ஒரு ரூபாய் வரை விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 70 காசுகள் முதல் ஒரு ரூபாய் 30 காசு வரை விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு விலை உயரும் என்பதை கூறாதபோதும், அது வாடிக்கையாளர்களுக்கு சுமையாக இருக்காது என்று மட்டும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில் மீண்டும் விலை உயர உள்ளது.

    Also see:

     

     

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: