Home /News /national /

Petrol price hike | தென்னிந்திய மாநிலங்களிலும் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கலக்கத்தில் மக்கள்

Petrol price hike | தென்னிந்திய மாநிலங்களிலும் 100 ரூபாயைக் கடந்த பெட்ரோல் விலை- கலக்கத்தில் மக்கள்

பெட்ரோல் நிலையம்(மாதிரி படம்)

பெட்ரோல் நிலையம்(மாதிரி படம்)

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து, தென் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை சதமடித்துள்ளது.

    மே மாதத்தில் மட்டும் 19 முறை உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை, தற்போதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.98  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலம் போபால் மற்றும் இந்தூரில் லிட்டர் பெட்ரோல் விலை 103 ரூபாயை நெருங்கியுள்ளது. வடமாநிலங்கள் மட்டுமின்றி ஆந்திராவிலும் விசாகப்பட்டினத்தை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 100 ரூபாய்க்கு அதிகமாக ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது.

    விசாகப்பட்டினத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99.75 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தெலங்கானாவின் அடிலாபாத்தில் 100.57 ரூபாய்க்கும், நிசாமாபாத்தில் 100.17 ரூபாய்க்கும், பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தானின் கங்காநகரில் ஒரு லிட்டர் பெட்ரோல் 105.81 ரூபாய்க்கும், டீசல் 98.64 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96.23 ரூபாய்க்கும், டீசல் 90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 110 அமெரிக்க டாலர்கள் என்று கடந்த காலங்களில் விற்பனை செய்யப்பட்டபோது, இந்தியாவில் 66 ரூபாய்க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு பேரல் 70 டாலர்கள் என்று வீழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில், நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளது. மத்திய அரசு கலால் வரியை உயர்த்துவதால், கச்சா எண்ணெய் விலை குறைவதன் பலன்கள் மக்களுக்கு கிடைப்பதில்லை என்று தொழில்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி 307 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதுதவிர மாநில அரசுகள் மூலம் விதிக்கப்படும் மதிப்புக் கூட்டு வரியாலும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தை தொட்டு வருவதாக கூறுகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published:

    Tags: Petrol Diesel Price hike

    அடுத்த செய்தி