• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்த 22 மாநிலங்கள்.. வரியை குறைக்காத மாநிலங்கள் எவை?

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்த 22 மாநிலங்கள்.. வரியை குறைக்காத மாநிலங்கள் எவை?

Petrol diesel price

Petrol diesel price

கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்திருப்பதன் மூலம் அந்த பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைந்திருக்கிறது.

  • Share this:
தீபாவளி பண்டிகை முதல் பெட்ரோல் மீதான கலால் வரியில் ஐந்து ரூபாயும், டீசல் விலையில் 10 ரூபாயையும் மத்திய அரசு குறைத்த நிலையில், இதனை முன்மாதிரியாக கொண்டு எந்தெந்த மாநில அரசுகள் வாட் வரியை குறைத்திருக்கின்றன, எந்தெந்த மாநிலங்கள் குறைக்காமல் இருந்து வருகின்றன என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.

மத்திய அரசின் அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையை அடுத்து பாஜக ஆளும் பெரும்பாலான மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை கூடுதலாக குறைத்துள்ளன. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் எரிபொருட்களின் விலை பெருமளவு குறைந்துள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்திருப்பதன் மூலம் அந்த பிரதேசங்களில் பெட்ரோல், டீசல் விலை பெருமளவு குறைந்திருக்கிறது. இதே போல கேரளா, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்கள் மாநிலங்களில் வாட் வரியை குறைக்காமல் உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:  இந்திய அணி ஃபைனலுக்கு முன்னேற வேண்டும், ஆனால்…. : சோயிப் அக்தர் வைத்த ட்விஸ்ட்

வாட் வரியை குறைக்காத மாநிலங்கள்:

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்குவங்கம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மேகாலயா, ஜார்க்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், அந்தமான் நிகோபார் போன்ற 14 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இன்னும் வாட் வரியை குறைக்கவில்லை. இதர மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் வாட் வரியை குறைத்திருக்கின்றன.

வரி குறைத்த மாநிலங்கள்:

இந்தியாவிலேயே அதிகளவாக பெட்ரோல் மீதான வாட் வரியை லடாக் யூனியன் பிரதேசம் 13.43 ரூபாய் அளவுக்கு குறைத்துள்ளது. கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்கள் இதற்கடுத்த இடங்களை பிடித்துள்ளன. அங்கு முறையே பெட்ரோல் விலையில் 13.35 மற்றும் 12.85 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

Also read:  தனியார் பள்ளியின் கழிவறையில் மறைத்து பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள்.. பெண்களை வீடியோ எடுத்தது அம்பலம்..

இதே போல நாட்டிலேயே அதிகளவாக டீசல் மீதான வாட் வரியையும் லடாக் குறைத்திருப்பதால் அங்கு டீசல் லிட்டருக்கு 19.61 ரூபாய் குறைந்துள்ளது. இதற்கடுத்த இடங்களை கர்நாடகமும், புதுச்சேரியும் பிடித்துள்ளன. உத்தரகண்ட் மாநிலத்தில் வாட் வரி சிறிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் காஸ்ட்லி:

வாட் வரி குறைக்காததால் தற்போது நாட்டிலேயே பெட்ரோல் விலை அதிகம் உள்ள மாநிலமாக திகழ்கிறது ராஜஸ்தான். அங்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 111.10 ரூபாயாக உள்ளது. மகாராஷ்டிராவில் 109.98 ரூபாயாகவும், ஆந்திராவில் 109.05 ரூபாயாகவும் உள்ளன. பாஜக ஆளும் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையாகின்றன.

மிசோரமில் மிக குறைவு:

நாட்டிலேயே டீசல் விலை குறைவாக இருக்கும் மாநிலம் மிசோரம் தான் அங்கு லிட்டர் ஒன்றின் விலை 79.55 ரூபாயாக இருந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: