Petrol-Diesel Price hike | பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: கச்சா எண்ணெய் விலை சரிந்தும் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு விலை உயர்வு

Petrol-Diesel Price hike | பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு: கச்சா எண்ணெய் விலை சரிந்தும் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு விலை உயர்வு

பெட்ரோல், டீசல்

சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கோவிட் காரணமாக தேவை குறைந்ததால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது, இருந்தும் 2 மாதமாக உயர்த்தாத பெட்ரோல் டீசல் விலைகளினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இன்று தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
    நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு பெட்ரோல் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. கோவிட் காரணமாக தேவை குறைந்ததால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு வருகிறது, இருந்தும் 2 மாதமாக உயர்த்தாத பெட்ரோல் டீசல் விலைகளினால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இன்று தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

    எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை அதிகரித்துக் கொண்டேதான் செல்லும் என்று தெரிகிறது.

    செவ்வாயன்று அனைத்து மெட்ரோ நகரங்களிலும் பெட்ரோல் டீசல் விலை 12 முதல் 15 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90.55 ஆக உள்ளது.

    மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை அதிகரிப்புக்குப் பிறகு 96.95 ரூபாயக உள்ளது.

    கொல்கத்தாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.90.76 என்ற விலையில் விற்கப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் விலை 12 காசுகள் அதிகரிக்கப்பட்டு லிட்டர் விலை ரூ.93.67 ஆக உள்ளது. பெங்களூருவில் அதிகபட்சமாக லிட்டருக்கு 24 காசுகள் அதிகரிக்கப்பட்டு ரூ.93.67 என்று உள்ளது.

    ஆனால் குருகிராம், புவனேஷ்வர், ஜெய்பூரில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளன.

    அதே போல் பெருநகரங்களில் டீசல் விலை 15-18 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளன. இதனையடுத்து டெல்லியில் டீசல் விலை 18 காசுகள் அதிகரித்து ரூ.80.91 ஆகவும் மும்பையில் 17 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ 87.98 ஆகவும், சென்னையில் 15 காசுகள் அதிகரித்து ரூ.85.90 ஆகவும் கொல்கத்தாவில் 17 காசுகள் கூடி ரூ.83.78 ஆகவும் உள்ளன.

    இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கொரோனா பரவல் காரணமாக 2020-ல் குறைந்தது. இப்போது 2ம் அலை அடிப்பதாலும் நுகர்வு குறையும் இதனால் இறக்குமதியும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவில் கோவிட் 19 நிலவரத்தில் உடனடி முன்னேற்றம் இல்லை எனும்போது உலக கச்சா எண்ணெய் விலைகள் மேலும் குறையவே செய்யும். இப்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், ஆனால் 2 மாதம் பெட்ரோல், டீசல் விலையை தேர்தலுக்காக உயர்த்தாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட நிச்சயம் பெட்ரோல். டீசல் விலைகளை அதிகரித்துக் கொண்டேதான் செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.

    மத்திய அரசும் மாநில அரசுகளும் அதிக வரி விதிப்பதனால்தான் பெட்ரோல், டீசல் விலை இப்படி உயருகிறது. உலகிலேயே எரிபொருள் மீது அதிக வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்று இந்தியா.

    மேலும் கோவிட் -19 நெருக்கடியிலும் பெட்ரோல், டீசல் வருவாய் பாதிக்காததால் மத்திய அரசு நிச்சயம் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காது என்றே இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
    Published by:Muthukumar
    First published: