• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Petrol Diesel Price hike | 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை: உ.பி. அமைச்சர் சொல்கிறார்

Petrol Diesel Price hike | 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை: உ.பி. அமைச்சர் சொல்கிறார்

உ.பி. அமைச்சர்

உ.பி. அமைச்சர்

வியாழனன்று பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சத்தைத் தொட்டதையடுத்து உத்தரப் பிரதேச அமைச்சர் உபேந்திர திவாரி 95% மக்களுக்கு பெட்ரோல் தேவையில்லை என்ற அதிசயப் புள்ளி விவரத் தகவலை வெளியிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பெட்ரோல் டீசல் விலைகள் பெரிய அளவில் உச்சம் தொடுவதையடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை வானளாவ உயர்ந்து வருகிறது. இதனால் சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றன. மக்கள் திண்டாடுகின்றனர் என்று எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை வைப்பதை எதிர்த்து உ.பி. அமைச்சர் உபேந்திர திவாரி 95% மக்களுக்கு பெட்ரோலின் தேவையே இல்லை என்று  தெரிவித்துள்ளார். இது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

    மேலும் அவர், பெட்ரோல், டீசல் விலைகள் ரியலாகப் பார்த்தால் உயரவே இல்லை என்கிறார்.  2014-ல் தனிநபர் வருவாய் இருந்ததை விட இப்போது அதிகமாகியுள்ளது. அதாவது அவர் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தனிநபர் வருவாய் அதிகரித்துள்ளது அதனால் இந்த பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை என்கிறார். தற்போது  மிகவும் குறைவாகவே 4 சக்கர வாகனங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர், இதனால் 95% மக்களுக்கு பெட்ரோலின் தேவை இருக்கவில்லை என்கிறார்.

    நாடு முழுதும் பெட்ரோல் விலை ரூ.100ஐக் கடந்து விட்டது, டீசல் விலை இப்பவோ அப்பவோ என ரூ.100க்கு அருகில் உள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. உணவுபொருட்கள், பழங்கள், காய்கள் ஆகியவற்றின் விலைகள் சமாளிக்க முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

    மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீது எக்சைஸ் டூட்டி மற்றும் செஸ் வரியை சுமத்துகிறது, மாநில அரசுகள் மதிப்புக்கூட்டு வரியை பெட்ரோல் டீசல் மீது சுமத்துகின்றன. இதனால் பெட்ரோல் சில்லரை விற்பனை விலை மீது 58% வரியும், டீசல் விலை மீது 52% வரியும் சுமத்தப்படுகிறது.

    அதாவது பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ரூ.100 என்றால் இதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வரி மட்டுமே 58 ரூபாய்களாகும். 2014-15-ல் உலக கச்சா எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்த நிலையில் நவம்பர் 2014 முதல் மோடி அரசு தீர்வை வரியை அதிகரிக்கத் தொடங்கியது. ஆகவே சர்வதேசச் சந்தையைக் காரணமாக காட்டும் அரசு, சர்வதேச சந்தையில் விலை குறைந்த போது அதன் பயன்களை மக்களுக்கு பகிர்ந்தளிக்கவில்லை என்பதே எதிர்க்கட்சிகளின் விமர்சனமாக உள்ளது.

    பெட்ரோல் டீசல் விலைகளில் ரூ.1 அதிகரித்தால் அதன் மூலம் அரசுக்கு ரூ.13,000-14,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது என்கின்றன புள்ளி விவரங்கள். இந்நிலையில் 95% மக்கள் பெட்ரோல் பயன்படுத்துவதில்லை என்று உ.பி. மாநில அமைச்சர் பேசியிருப்பது கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: