• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசின் தீபாவளி பரிசு

பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ.10 விலை குறைப்பு - மத்திய அரசின் தீபாவளி பரிசு

Petrol diesel price

Petrol diesel price

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி நாளை முதல் குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  • Share this:
    பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. மாநில அரசுகளையும் வரியைக் குறைக்கச் சொல்லி வந்துள்ளது. அதன்மூலம் பெட்ரோல் 5 ரூபாயும், டீசல் 10 ரூபாயும் விலை குறையவுள்ளது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்குவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு மாதமாக தினசரி தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 120 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. இந்த விலை உயர்வு சாமானிய மக்களை வெகுவாக பாதித்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு சிறிய அளவில் குறைத்துள்ளது. இந்த கலால் வரி குறைப்பால் நாளை முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை 10 ரூபாயும் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: