Home /News /national /

மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120ஐ கடந்தது!

மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.120ஐ கடந்தது!

பெட்ரோல்

பெட்ரோல்

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ச்சியாக 4வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 121.52 ரூபாய்க்கும் டீசல் 1 12.44 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

    பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின்படி, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் போன்ற் எரிபொருளின் விலை தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. அக்டோபர் 25 முதல் 27ம் தேதிவரை பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக விலை உயர்ந்து வருகிறது. 4வது நாளாக இன்றும் அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  இதன் காரணமாக நாட்டிலேயே அதிகபட்சமாக மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் 121.52 ரூபாய்க்கும் டீசல் 1 12.44 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    இதேபோல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  115.15 ரூபாய்க்கும் டீசல் 106.23 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல்  109.34  ரூபாய்க்கும் டீசல் 98.07  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து 106.04 ரூபாய்க்கும், டீசல் 33 காசுகள் அதிகரித்து 102.25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    இதையும் படிங்க: அருணாச்சல பிரதேசத்தில் கருப்பாக மாறிய ஆறு... ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு: சீனா காரணமா?

    Published by:Murugesh M
    First published:

    Tags: Fuel Price, Fuel Price hike, Petrol Diesel Price

    அடுத்த செய்தி