சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை!

சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான மனுக்கள் இன்று விசாரணை!
உச்சநீதிமன்றம்
  • News18
  • Last Updated: February 3, 2020, 10:58 AM IST
  • Share this:
சபரிமலை உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 9 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு சீராய்வு மனுக்களை விசாரிக்கிறது. வழக்கின் மீதான வாதங்களை 10 நாட்களில் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.

வழக்கு தொடர்பான பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து வழக்கறிஞர்கள் முடிவு செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.


ஆனால் வழக்கறிஞர்கள் இடையே கருத்தொற்றுமை ஏற்படாததால், இன்று வழக்கு விசாரணைக்கு வரும்போது, வழக்கு தொடர்பான பிரச்னைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து நீதிபதிகள் முடிவு செய்வார்கள். அதன் பின் விசாரணை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see...
First published: February 3, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading