முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு!

“நீங்கள் (மனுதாரர்) நிஜமாகவே இந்த வழக்கில் வாதாட விரும்புகிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு!
உச்சநீதிமன்றம்
  • News18
  • Last Updated: March 15, 2019, 8:11 PM IST
  • Share this:
முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உத்தரகாண்டைச் சேர்ந்த சங்கத் சிங் சவுகான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும், அங்குள்ள இந்துக்களை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Read Also... அரசு அலுவலகங்களில் ஃபேன்களைக் கழட்ட தெலுங்கு தேசம் கட்சி கோரிக்கை! எதற்க்கு?


இந்த மனு நீதிபதிகள் நாரிமன் மற்றும் வினீத் சரன் ஆகியோர் அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. “நீங்கள் (மனுதாரர்) நிஜமாகவே இந்த வழக்கில் வாதாட விரும்புகிறீர்களா?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் ஆனால் மனுதாரர் பல தடைகளை சந்திக்க வேண்டியவரும் என்று கூறினர்.

இதனை அடுத்து, மனுதார் இல்லை என்று கூற மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

See Also... ஆர்யா - சாயிஷா திருமண வரவேற்பு ஃபோட்டோஸ்!இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை ஒப்பந்தப்படி முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதாகவும், இந்தியாவில் முஸ்லிம்கள் வசிக்கக்கூடாது என்றும் தனது மனுவில் சவுகான் தெரிவித்திருந்தார்.

Also See...

First published: March 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்