₹100 நோட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு

₹100 நோட்டை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் மனு

கோப்பு படம்

50,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

 • Share this:
  கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க 100 ரூபாய் நோட்டை ரத்து செய்ய வேண்டுமென பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

  கருப்பு பணத்தை தடுக்கும் வகையில், 5000 ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் அனைத்துக்கும் ஆதாரம் கட்டாயமாக்கபட வேண்டும் எனவும், 50,000 ரூபாய்க்கு மேல் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்றும் உத்தரவிடக் கோரி, பாஜக வைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா என்பவர் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார்.
  இதன் மூலம் கருப்பு பணத்தை முழுமையாக ஒழிக்க முடியும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

  மேலும் 100 ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதன் மூலம் மத்திய அரசு கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

  அதுமட்டுமின்றி மாவட்டங்கள் தோறும் ஊழல் தடுப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். ஊழல் வழக்கை ஓராண்டுக்குள் முடிக்கும் வகையில் இந்த நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும், உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும் தனது மனுவில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: