கிரண் பேடிக்கு கூடுதல் அதிகாரம் ரத்து! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசின் ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அதிகாரம் வழங்கியது.

கிரண் பேடிக்கு கூடுதல் அதிகாரம் ரத்து! உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: May 5, 2019, 6:10 PM IST
  • Share this:
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்தது தொடர்பான விவகாரத்தில், எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடும் வகையில், அரசின் ஆவணங்களைக் கோருவதற்கு துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் அதிகாரம் வழங்கியது.

இதை எதிர்த்து, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட கூடுதல் அதிகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், எம்.எல்.ஏ லட்சுமி நாராயணன், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், கிரண் பேடியின் அதிகாரம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, யாரேனும் மேல்முறையீடு செய்தால், தமது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

Also Watch
First published: May 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்