'குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்குங்கள்': உச்சநீதிமன்றம்

news18
Updated: August 10, 2018, 8:03 AM IST
'குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்குங்கள்': உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
news18
Updated: August 10, 2018, 8:03 AM IST
குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று உச்சநீதிமன்றம் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளது.

குற்றப் பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்குகளை தலைமை நீதிபதி  தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. உச்சநீதிமன்றம், நாடாளுமன்றம் இடையிலான அதிகாரப் பகிர்வுக்கான கோட்பாடானது லட்சுமணன் கோடு போன்றது என்றும் அந்த எல்லையைக் கடந்து நாடாளுமன்றத்துக்கான அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட இயலாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி எம்.எல்.ஏ. மற்றும் எம்.பிக்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபணமாகும் பட்சத்தில் அவர் இயல்பாகவே தகுதியை இழந்து விடுகிறார் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தகுதி நீக்கத்துக்கான வரையறையை இணைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்துவது கடினமானது என்றும் தெரிவித்தனர்.

மேலும், அரசியலில் குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு  இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
First published: August 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...