ஹோம் /நியூஸ் /இந்தியா /

எமனாக மாறிய பாறை.. நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இளைஞருக்கு நிகழ்ந்த துயரம்..

எமனாக மாறிய பாறை.. நண்பர்களுடன் சுற்றுலா சென்ற போது இளைஞருக்கு நிகழ்ந்த துயரம்..

எமனாக மாறிய பாறைக்கல்

எமனாக மாறிய பாறைக்கல்

Viral Video | வயநாடு பகுதிக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் முன் சென்ற இருசக்கர வாகனம் பாறைக்கல் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இரு சக்கர வாகனத்தின் பின் இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நண்பர்களுடன் பைக்கில் சுற்றுலா சென்ற போது பாறைக்கல் எமனாக மாறி பைக்கின் மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் தாமரசேரி அருகே மலைப்பாதை வழியாக நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளனர்.அப்போது, முன்னர் இரண்டு நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்க, பின்னர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பயணித்தபடி சென்று கொண்டிருந்தனர்.

இதனிடையே திடீரென எதிர்பாராத விதமாக முன்னர் பைக்கை ஓட்டிச் சென்றவர்கள் மீது மேல் இருந்து உருண்டோடி வந்த பாறை மோதி இருவரும் பைக்கில் இருந்து அருகில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பைக்கில் பின்னர் அமர்ந்து வந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாறை விழுந்த பைக்கில் முன்னர் சென்று கொண்டிருந்தவர்கள்

பைக்கில் செல்லும் போது மலை உச்சியில் இருந்து உருண்டு வந்த பாறைக்கல் மோதி இருசக்கர வாகன ஓட்டி மற்றும் பின் பகுதியில் இருந்தவரையும் தூக்கி வீசும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த மாதம் 16ம் தேதி நடந்த இந்த விபத்தின் காட்சிகளை பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.

வயநாடு பகுதிக்கு சுற்றுலாவுக்காக நண்பர்களுடன் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் முன் சென்ற இருசக்கர வாகனம் பாறைக்கல் மோதியதில் தூக்கி வீசப்பட்டு இரு சக்கர வாகனத்தின் பின் இருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வாகனத்தை ஒட்டியவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்து உள்ளார்.தொடர் விசாரணையில் உயிரிழந்தவர் மலப்புரம் பகுதியை சார்ந்த அபிநவ் என்பது தெரியவந்துள்ளது.

First published:

Tags: Kerala, Viral Video, Wayanad