குஜராத் உயர்நீதிமன்றம் பொது, தனியார் இடங்கள் மற்றும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களில் பெண்களின் மாதவிடாய் நிலையின் அடிப்படையில் சமூக விலக்கப்படுவதை தடை செய்ய முன்மொழிந்துள்ளது.
Nirjhari Sinha என்ற செயற்பாட்டாளர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம், மாதவிடாய் காலத்தில் பெண்களை தடை செய்யும் அனைத்து சட்டதிட்டங்கள் மற்றும் விதிகளை தடை செய்ய முன்மொழிந்துள்ளது. இது நெட்வொர்க் 18 மற்றும் Whisper ஆகியவற்றின் #PeriodOfPride-க்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு குஜராத்தின் புஜ் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவம் நடைபெற்றது. அந்த கல்லூரியின் ஹாஸ்டல் வார்டன் தலைமை ஆசிரியரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதன்படி கல்லூரியின் மதக்கட்டுப்பாட்டை மீறி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சிலர் கோவிலுக்கு சென்றதாக கூறினார்.
இந்த புகாரின் அடிப்படையில் செயல்பட்ட தலைமை ஆசிரியர், கல்லூரி மாணவிகள் 60க்கும் மேற்பட்டோரை தனியாக பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று உள்ளாடைகளை களைந்து அவர்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கின்றனரா என்பதை கண்டறிந்தனர். இந்த தகவல் வெளிவந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை Nirjhari Sinha என்ற செயற்பாட்டாளர் தாக்கல் செய்தார்.
Nirjhari Sinha சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மாதவிடாய் என்பது ஒரு உடலியல் நிகழ்வு, ஒவ்வொரு பெண்ணும் அனுபவிக்கும் இனப்பெருக்க சுழற்சியின் இயல்பான பகுதியாகும், ஆனால் இது எப்போதும் தடைகள் மற்றும் கட்டுக்கதைகளுடன் தொடர்புடையது, இது பெண்களை அவர்களின் அன்றாட வாழ்க்கையிலிருந்து விலக்குகிறது என சுட்டிக்காட்டியதுடன் புராணங்கள் ஒரு பெண் தூய்மையற்றவள் மற்றும் அவளது மாதவிடாயின் போது சுற்றுப்புறங்களை மாசுபடுத்தும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தவை.
ஆகையால், அவள் தனிமையில் வைக்கப்படுகிறாள், அன்றாட நடவடிக்கைகளிலிருந்து விலக்கப்படுகிறாள், தண்ணீரைத் தொட அனுமதிக்கப்படவில்லை, சமையல் செய்ய அனுமதிக்கப்படவில்லை, பாத்திரங்களைத் தொட அனுமதிக்கப்படவில்லை, தனித்தனியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் தங்கியிருக்கிறாள், எந்தவொரு மத விழாவிலும் சடங்குகளிலும் கோயிலுக்கு வருவதில்லை.” என வாதிட்டார்.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக, பெண்களை பாகுபாடாக நடத்தும் விவகாரங்களில் மத்திய, மாநில அரசுகளின் பதில்களை கேட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், நாங்கள் மிகவும் நுட்பமான பிரச்சினையை கையாள்கிறோம் என்ற உண்மையை நாங்கள் அறிந்திருக்கிறோம், எனவே, இது தொடர்பாக அனைவரின் கருத்துக்களையும் கேட்க வேண்டியது அவசியம் எனவும், இந்த வழக்கில் ஆரோக்கியமான மற்றும் அர்த்தமுள்ள விவாதம் அவசியம் எனவும் தெரிவித்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Court Case, Gujarat, Menstruation