யாகங்கள் நடத்துங்கள் கொரோனா 3-வது அலை இந்தியாவை சீண்டாது: பாஜக அமைச்சர் உஷா தாக்கூர்

மத்திய பிரதேச அமைச்சர் உஷா தாக்கூர், பாஜக.

மத்திய பிரதேச மாநில கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர் யாகங்கள் நடத்துங்கள் இந்தியாவை கொரோனா வைரஸ் 3-ம் அலை தீண்டவே தீண்டாது என்று கூறியுள்ளார்.

 • Share this:
  மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

  இந்தியாவில் கொரொனா 2ம் அலையே முடிந்தபாடில்லை, தீவிரமாகப் பரவி வரும் நிலையில் ஆங்காங்கே ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவமனைகளில் படுக்கை இன்மை, ஐசியூக்களில் இடமின்மை என்று இந்தியா நொறுங்கிக் கொண்டிருக்கிறது. மரண ஓலங்களும், ஆம்புலஸ் சப்தங்களும், இடுகாட்டு நெருப்புகளும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் போது உஷா தாக்கூர் இப்படி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  இந்தூரில் கோவிட்-19 மருத்துவமனை ஒன்றைத் திறந்து வைத்து உஷா தாக்கூர் கூறியதாவது:

  சுற்றுச்சூழல் சுத்தமடைய யாகங்களை 4 நாட்களுக்கு நடத்துங்கள். இது யக்ஞ சிகிச்சை ஆகும். ஆதிகாலங்களில் நம் மூதாதையர்கள் பெருந்தொற்றுக்களை ஒழிக்க யாகங்களை நடத்தினர்.

  யாகங்கள் நடத்தினால் கொரோனா 3-வது அலை நம் நாட்டைத் தீண்டாது.

  நிபுணர்கள் கருத்தின் படி இந்த அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுகிறது. இதற்காக மத்திய பிரதேச அரசு முழுத் தயாரிப்பில் உள்ளது. நாம் கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக வென்று விடுவோம்.

  இவ்வாறு கூறினார் உஷா தாக்கூர்.

  முன்னதாக இந்தூர் விமானநிலையத்தில் உள்ள விக்கிரகத்தின் முன்னால் உஷா தாக்கூர் சடங்குகள் நிகழ்த்தினார். இவர் சமீபத்தில் கொரோனா சிகிச்சை மையத்துக்கு இவர் மாஸ்க் அணியாமல் சென்றது சமூக ஊடகங்களில் பலத்த விமர்சனத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  முன்னதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தாக்கத்தை ஒழிக்க ருத்ராபிஷேகம் செய்து பூஜை நடத்தியதில் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

  மத்தியப் பிரதேசத்தில் இன்றைய தேதியில் 1 லட்சத்துக்கு 11 ஆயிரத்து 366 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர், நேற்று 94 பேர் பலியானதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 6,595 ஆக அதிகரித்துள்ளது.
  Published by:Muthukumar
  First published: