யோகியை துரோகி என்று கூறவில்லை, ஊடகங்கள் திரித்துவிட்டன: மத்திய அமைச்சர் ஆதங்கம்

‘ஊடங்களை ஆங்கிலத்தில் கடுமையாக விமர்சிக்கப் பயன்படுத்தும் பிரஸ்டிடியூட்(Presstitute) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார்.

news18
Updated: April 5, 2019, 9:08 AM IST
யோகியை துரோகி என்று கூறவில்லை, ஊடகங்கள் திரித்துவிட்டன: மத்திய அமைச்சர் ஆதங்கம்
வி.கே.சிங்
news18
Updated: April 5, 2019, 9:08 AM IST
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்த, தனது கருத்தை ஊடகங்கள் தவறாக திரித்து வெளியிட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அம்மாநில முதல்வர் யோகிஆதித்யநாத், இந்திய ராணுவத்தை மோடியின்படை என்று விமர்சனம் செய்தார். அவரது பேச்சுக்கு எதிர்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பி.பி.சி இந்தியில் அமைச்சர் வி.கே.சிங்கின் பேட்டி வெளியானது. அதில், ‘இந்திய ராணுவத்தை மோடியின் படை என்று கூறியவர்கள் நாட்டின் துரோகிகள்’ என்று பேசியதாக செய்திகள் வெளியாயின. பி.பி.சி இந்தியின் செய்தியின் அடிப்படையில் அனைத்து ஊடகங்களிலும் இந்தச் செய்தி வெளியானது.

பா.ஜ.க மாநில முதல்வர் ஒருவரை, துரோகி என்று மத்திய அமைச்சரே விமர்சனம் செய்தது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், துரோகி என்று கூறவில்லை என்று தற்போது வி.கே.சிங் விளக்கம் அளித்துள்ளார். மேலும் ஊடகங்களைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ‘ஊடங்களை ஆங்கிலத்தில் கடுமையாக விமர்சிக்கப் பயன்படுத்தும் பிரஸ்டிடியூட்(Presstitute) என்ற வார்த்தையைக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த அவருடைய பதிவில், ‘ஊடகங்கள் செய்திகளை திரித்து வெளியிடும் என்று எதை வைத்து நான் கூறியிருந்தேனோ, அதே விஷயத்தை பி.பி.சி. இந்தி தற்போது செய்துள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்கான வீடியோ பதிவு உள்ளது. இதனைப் பார்க்கும்போது, அந்தச் செய்தியாளர் தூங்கிக்கொண்டிருந்தார் என்று தெரிகிறது. அல்லது, எடிட்டிங் செய்து அவர் வேண்டுமென்றே தவறான கூற்றை உருவாக்கியுள்ளாரா? இதைச் செய்வதற்கு அந்தச் செய்தியாளருக்கு எவ்வளவு பணம் வழங்கப்பட்டுள்ளது?’ என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதனையடுத்து, பி.பி.சி இந்தி, அதனுடைய ட்விட்டர் பக்கத்தில் வி.கே.சிங்குடனான முழு வீடியோ பதிவையும் வெளியிட்டுள்ளது. இதே வார்த்தையை பயன்படுத்தி ஊடகங்களை நான்கு ஆண்டுகளுக்கு முன்னரும் வி.கே.சிங் விமர்சனம் செய்துள்ளார். வி.கே.சிங்கின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...
Also see:

First published: April 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...