ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளி பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட தினம் காங்கிரஸ் கட்சிக்கு கருப்பு தினம் என்று புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ ஜெயமூர்த்தியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முருங்கப்பாக்கம் நான்குமுனை சந்திப்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன், முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், ஆகியோர் கலந்துகொண்டு ஜெயமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் ஏழை எளிய மக்களுக்கு காலை சிற்றுண்டியை வழங்கினார்கள்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தினம் காங்கிரஸ் கட்சிக்கு கருப்பு தினம் என்றும், பேரறிவாளன் விடுதலை என்பது ஜனநாயகத்திற்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்றும் தெரிவித்தார். ராஜீவ் குற்றவாளியான பேரறிவாளனை நீதிமன்றம் மன்னித்தாலும் இறைவன் மன்னிக்க மாட்டான் என்று தெரிவித்த அவர் விடுதலையை கண்டித்து தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் போல் புதுச்சேரியிலும் நடைபெறும் என்றார்.
ALSO READ | பேரறிவாளன் விடுதலையால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா? - திருநாவுக்கரசர் விளக்கம்
இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இந்திய அரசின் எதிர்கால விடிவெள்ளியாக திகழ்ந்தவர், வெளியுறவு மற்றும் அணுகுண்டு கொள்கையில் திறம்பட செயல்பட்டவர், பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று உறுதியாக இருந்தவர் அவரின் மறைவு என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதே வேளையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆகியோர் மன்னித்தாலும் காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டன் கூட அதை மன்னிக்க மாட்டான் என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Perarivalan, Puducherry, Rajiv death case