• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்!

விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்றது பெப்சி நிறுவனம்!

கோப்பு படம்

கோப்பு படம்

பெப்சிகோ நிறுவனம் விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
குஜராத்தில் FC5 ரக உருளைக் கிழங்கை உற்பத்தி செய்த விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் பெப்சிகோ நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது.

லேஸ் சிப்ஸ் தயாரிப்பதற்காக ஈரப்பதம் குறைந்த FC5 ரக உருளைக் கிழங்கு உரிமத்தை பெப்சிகோ நிறுவனம் பதிவு செய்திருந்தது.

அந்த ரக உருளைக் கிழங்கை, குஜராத்தைச் சேர்ந்த விவசாயிகள் 11 பேர் பயிரிட்டனர். இதை அறிந்த பெப்சிகோ நிறுவனம் விவசாயிகள் ஒவ்வொருவரிடமும் இருந்து தலா ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது.

பெப்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து அந்நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து விவசாயிகள் மீதான அனைத்து வழக்குகளையும் பெப்சி நிறுவனம் திரும்பப் பெற்றது.

Also Watch

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: