Home /News /national /

இறைவனை வழிபடுபவர்கள் ஒருபோதும் வன்முறை செய்ய மாட்டார்கள் - நிதீஷ் குமார் கருத்து

இறைவனை வழிபடுபவர்கள் ஒருபோதும் வன்முறை செய்ய மாட்டார்கள் - நிதீஷ் குமார் கருத்து

நிதீஷ் குமார்

நிதீஷ் குமார்

பிகார் என்பது முற்றிலும் அமைதியை விரும்பும் மாநிலம் என்று குறிப்பிட்ட நிதீஷ் குமார், அங்கு மத மோதல்கள் ஏற்படுவதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

    இறைவனை வழிபடும் மக்கள் ஒரு போதும் வன்முறை செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் நாட்டில் மத ரீதியாக நடக்கும் வன்முறை கவலைக்குரிய அம்சம் எனத் தெரிவித்துள்ளார்.பிகார் மாநிலத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது இது தொடர்பான நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு தனது கருத்தை நிதீஷ்  தெரிவித்தார். அப்போது அவர்,  மதத்தை வைத்து சச்சரவு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

    மத விவகாரங்களில் சர்ச்சை சச்சரவு என்ற பேச்சே தேவையற்றது. பூஜை செய்து வழிபாடு செய்யும் மக்கள் எவ்வாறு மத வன்முறையில் ஈடுபடு முடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து அவர், "பிகார் என்பது முற்றிலும் அமைதியை விரும்பும் மாநிலமாகும். இங்கு மத மோதல்கள் ஏற்படுவதே இல்லை.

    நான் பிகாரில் மத ரீதியான சச்சரவு உருவாவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.  2006ஆம் ஆண்டுக்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதாதளம் ஆட்சியிலிருந்த போது பிகாரில் என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும்" எனக் கூறியுள்ளார்.

    மசூதிகளில் ஒலி பெருக்கி பயன்பாடு குறித்த கேள்விக்கு, "மக்கள் தங்கள் மனம் போன போக்கில் ஏதேனும் கருத்தை கூறுவார்கள். மக்கள் தங்கள் தங்கள் நம்பிக்கைபடி மத வழிபாட்டை பின்பற்றலாம், அதை யாரும் தடுக்க கூடாது. அன்பு மற்றும் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே மக்கள் வாழ வேண்டும்" என அவர் பதிலளித்தார்.

    நாடு முழுவதும் ராம நவமி, அனுமன் ஜெயந்தி விழாவும் அன்மையில் கொண்டாடப்பட்டது.  அதேவேளை, ரம்ஜான் நோன்பும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டெல்லி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஊர்வலத்தில் மோதல் வெடித்து கலவரம் ஏற்பட்டது. இது மாபெரும் சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் ஆளும் அரசுக்கு உருவெடுத்துள்ளது.

    பிகார் மாநிலத்தில் பாஜக ஆதரவு அரசை நடத்திவரும் நிதீஷ் குமார் இந்த மோதல் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதேவேளையில், ஆளும் பிகார் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஜிதின் ராம் மஞ்சி, தான் ராமரை நம்ப மாட்டேன் என அதிரடி கருத்தை ராம நவமியை ஒட்டி தெரிவித்திருந்தார்.
    பிகாரின் முன்னாள் முதலமைச்சரான மஞ்சி, "ராமர் கடவுள் அல்ல. வால்மீகி, துளசிதாஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவர்கள் ராமாயணத்தில் பல நல்ல கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதை ஏற்கிறோம். அதை நம்புகிறோம். ஆனால் ராமரை நம்பவில்லை" என்றார். பாஜக கூட்டணியில் உள்ள கட்சி தலைவர் ஒருவர் இதுபோன்ற கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Nitish Kumar, Violence

    அடுத்த செய்தி