கோவா உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 2022-ல் போட்டியிட ஆம் ஆத்மிக் கட்சி முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் கோவாவில் ஆட்சிக்கு வந்தால் என்று சிலபல நலத்திட்டங்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
பனாஜியில் செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்த 4 வாக்குறுதிகள்:
1. ஒவ்வொரு வீட்டுக்கும் மாதந்தோறும் 300 யூனிட்கள் வரை மின்சாரம் இலவசம்
2. பழைய மின்சாரக் கட்டண பில்களுக்கு முழு விலக்கு
3. மின்வெட்டே இல்லாத மாநிலமாக கோவாவை மாற்றுவோம்
4. வேளாண்மைக்காக இலவச மின்சாரம்
என்றுய் 4 வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
2 நாள் பயணமாக கோவா வந்தடைந்த அரவிந்த் கேஜ்ரிவால் அங்கு ஆம் ஆத்மி கட்சி நிலவரங்களை மதிப்பீடு செய்தார். தன் கட்சி தலைவர்கள் சிலரை அங்கு சந்தித்து நிலவரங்களையும் பணிகளையும் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: Hypersomnia | நிஜ வாழ்க்கையில் ஒரு கும்பகர்ணன்: வருடத்தில் 300 நாட்கள் தூங்கும் ராஜஸ்தான் நபர்- அரிதான நோய்
மகாராஷ்டிராவாதி கோமந்தக் கட்சியின் தலைவர் தீபக் தவாலிகர், இவரது சகோதரர் சுதின் ஆகியோர் கேஜ்ரிவாலைச் சந்தித்துப் பேசினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Also Read: டைனோசர்களுக்கு நுரையீரல் கிடையாதா? எப்படி அவை சுவாசிக்கும்? ஆய்வில் விளக்கம்!
கேஜ்ரிவால் அளித்த பேட்டியில், “கோவா சில ஆண்டுகளாக அழுக்கான அரசியலை சந்தித்து வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் வாங்கவும் விற்கவும் கிடைப்பார்கள் என்றால் எதற்கு இங்கு தேர்தல்?
காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மக்களை ஏமாற்றி விட்டன. கோவா மக்கள் தூய அரசியலை எதிர்நோக்குகின்றனர். அதனால்தான் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இந்த முறை கோவா மாற்றத்தை உருவாக்க விரும்புகிறது” என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.