ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் கனமழை!

மத்திய பிரதேச மாநிலத்திலும் ஷியோபூர், ரத்லம், ஷாஜாபூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், இந்திரா சாகர் அணை உள்பட 6 நீர் தேக்கங்களில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

news18
Updated: August 17, 2019, 11:54 AM IST
ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் மீண்டும் கனமழை!
கோப்புப் படம்
news18
Updated: August 17, 2019, 11:54 AM IST
ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெள்ளம் காரணமாக எங்கு தங்குவது என்று தெரியாமல் பொதுமக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் மீ்ண்டும் மழை வெளுத்து வாங்குகிறது. கடந்த வியாழக்கிழமை முதல் கோட்டா, பரான், பில்வாரா, ஜலாவர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

பலத்த மழை காரணமாக ஜோத்பூர், நாகௌர், பாலி ஆகிய பகுதிகளுக்கு இன்று ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கனமழைக்கு நேற்று 5 பேர் உயிரிழந்தனர்.


இதே போல, மத்திய பிரதேச மாநிலத்திலும் ஷியோபூர், ரத்லம், ஷாஜாபூர் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருவதால், இந்திரா சாகர் அணை உள்பட 6 நீர் தேக்கங்களில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

உபரிநீர் திறப்பால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்த இருப்பதால், உறிஞ்சும் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், எங்கு தங்குவது என்று தெரியாமல் வெள்ளத்தில் தத்தளித்து அகதிகளாக மக்கள் வெளியேறி வருகின்றனர்.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் தட்சிணா கன்னடா மாவட்டத்தில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பெல்தாங்கடியில் ஆற்றை கடக்க, கட்டைகளை கொண்டு பொதுமக்கள் தற்காலிக பாலம் அமைத்துள்ளனர். கைகளில் கிடைத்த பொருட்களுடன் அந்த வழியாக மக்கள் பத்திரமாக வெளியேறி வருகின்றனர்.

Loading...

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 28 பேர் உயிரிழந்தனர். உத்தரகாசி பகுதியில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால், ஏராளமான கிராமங்கள் துண்டிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொங்கிப் பாயும் ஹலாரா ஆற்று வெள்ளத்திற்கு இடையே பெண்களும், குழந்தைகளும் உயிரைப் பணயம் வைத்து, கயிறுகட்டி அதைப் பிடித்தபடி ஆற்றைக் கடக்கின்றனர்.

Also see...

First published: August 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...