Home /News /national /

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் - ராகுல் காந்தி

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் - ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

ஜனநாயகத்தைக் காக்க மக்கள் குரலெழுப்ப வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகத்தைக் காக்க நாட்டு மக்கள் குரலெழுப்ப வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரசியலமைப்பைச் சிதைத்து, ஜனநாயகத்தை அழிக்கும் செயலில் பாஜக இறங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    Also read: புதிய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை - தமிழக அரசின் நிலைப்பாடு என்ன?

    கொரோனாவுக்கு எதிராக நாடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜஸ்தான் மாநில அரசை கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஜனநாயக படுகொலை நிகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Democracy

    அடுத்த செய்தி