• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பண்டிகை காலங்களில் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் - பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் - பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் - பிரதமர் மோடி

பண்டிகை காலங்களில் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் - பிரதமர் மோடி

பண்டிகையின் போது மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளையே வாங்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
    பிரதமர் நரேந்திர மோடி ‘மான் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் இன்று நாட்டு மக்களிடம் பேசுகையில், பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மக்கள் அனைவரும் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். உள்நாட்டு பொருட்களை வாங்கினால் பிரகாசிப்பது பண்டிகைகள் மட்டுமல்ல, ஒரு ஏழை, ஒரு கைவினைக் கலைஞர், ஒரு நெசவாளியின் வீடு என ஏழை வியாபாரிகளின் வீட்டில் பிரகாசம் ஏற்படும்.

    இந்திய பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர், துணை ராணுவம் உள்ளிட்ட காவல் படைகளில் சேர்ந்துள்ள பெண்களின் எண்ணிக்கை கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.

    இன்றைய மற்றும் எதிர்காலத் தேவையை நிறைவேற்றும் வகையில் டிரோன் கொள்கையை வகுத்துள்ளது மத்திய அரசு. பொருட்களை அனுப்ப டிரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களை பயன்படுத்த தொடங்கி உள்ளது இந்தியா. சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படும் போது கண்காணிப்பு பணியை மேற்கொள்ள டிரோன்களை காவல்துறை பயன்படுத்துகிறது. கொரோனா தடுப்பூசிகளை தேவையான இடங்களுக்கு அனுப்பவும் டிரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

    மேலும், டிரோன் கொள்கையை அரசு அறிவித்த பிறகு, பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அத்துறையில் முதலீடு செய்துள்ளன. முப்படைகளும் ரூ.500 கோடிக்கு டிரோன்கள் வழங்க, இந்திய நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுத்துள்ளன. ட்ரோன் தொழில்நுட்பம் தற்போது கொரோனா தடுப்பூசி வினியோகத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

    கொரோனா தடுப்பூசி திட்டத்தில் வெற்றி கிடைத்திருப்பது சவால்களை எதிர்கொள்ளும் இந்தியாவின் திறனை வெளிக்காட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: