• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விளக்கேற்றி, ஒலி எழுப்பினால் கொரோனா ஒழிந்திடுமா என்றார்கள், ஆனால்.. பிரதமர் மோடி உரை

விளக்கேற்றி, ஒலி எழுப்பினால் கொரோனா ஒழிந்திடுமா என்றார்கள், ஆனால்.. பிரதமர் மோடி உரை

விளக்கேற்றி, கைத்தட்டி ஒலி எழுப்பியதை விமர்சித்தது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார்.

  • Share this:
    நாடு முழுவதும் 100 கோடி கொரோனா தடுப்பூசியை செலுத்தி சாதனை படைக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் இன்று உரையாற்றினார். அப்போது, நாட்டு மக்களின் கூட்டு முயற்சியில் தான் 100 கோடி டோஸ் என்பது சாத்தியமானது. 100 கோடி டோஸ் தடுப்பூசி என்பது தொடக்கம் தான்.

    புதிய இந்தியாவின் விடா முயற்சி மற்றும் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது. மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் தடுப்பூசியை எப்படி பெறுவார்கள், எப்படி செலுத்துவர்கள் என்ற கேள்விகள் எழுந்தன. எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் 100 கோடி டோஸ் என்ற சாதனை பதிலளித்துள்ளது.

    உலகளவில் மருந்து தயாரிப்பில் இந்தியாவிற்கு சிறந்த இடம் கிடைத்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தை கொண்டுவந்து இந்த சாதனையை எட்டியுள்ளோம். கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை அரசு உறுதி செய்துள்ளது.

    விளக்கு ஏற்றுவது, கைத்தட்டுவது எல்லாம் கொரோனாவை ஒழித்திடுமா என்று விமர்சித்தார்கள். ஆனால் அது மக்களின் பங்கேற்பு மற்றும் திறனின் பிரதிபலிப்பாகும். அவை எல்லாம் மருத்துவத்துறையை சேர்ந்தவர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது.
    இந்த வெற்றி இன்று பெரிய நாடுகளில் கூட இல்லாத தொழில்நுட்பத்தின் முக்கிய இடத்தை பிரதிபலிக்கிறது.

    நமது தடுப்பூசி திட்டம் தொழில்நுட்பத்தின் விளைவாகும். இது அறிவியலால் பிறந்தது, அறிவியலால் இயக்கப்பட்டது, அறிவியல் அடிப்படையிலானது. அறிவியலும், அறிவியல் அணுகுமுறையும் மட்டுமே அதன் மத்தியில் உள்ளது.

    எனினும், போர் இன்னும் முடிவடையவில்லை, ஆயுதங்களைக் கைவிடுவது மிக விரைவில் நடைபெறும் என்றும் அவர் கூறினார். முக கவசத்தை வாழ்க்கை முறையாக ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் காலணிகளை அணிவது போல், முக கவசங்களை அணிவதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: