Home /News /national /

தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன: கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை

தீபாவளியை முன்னிட்டு முன்பதிவு டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன: கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை

கோப்பு படம்

கோப்பு படம்

தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ஊரடங்கு தளர்வு காரணமாக தமிழகத்தில் கடந்த ஏழாம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளில் கூட்டம் குறைவாக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. வழக்கமான ரயில் போக்குவரத்து எதுவும் தொடங்கப்படாததால், சிறப்பு ரயில்களிலில் கொரோனா அச்சம் காரணமாக பலரும் வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்து வருகின்றனர்.

    பொதுவாக, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் தென் மாவட்ட மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, 3 மாதங்களுக்கு முன்பே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி வருகிற நவம்பர் மாதம் 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.



    இதையடுத்து, தற்போது தீபாவளிக்கான முன்பதிவும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, கன்னியாகுமரி, மதுரை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் நவம்பர் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத்தீர்ந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டன.

    இதேபோல், கோவை, திருச்சி, காரைக்குடி ரயில்களிலும் தீபாவளி முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கினால் தீபாவளி சமயத்தில் தங்களுக்கு வசதியாக இருக்கும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

    மேலும் படிக்க...என்னை தகுதி நீக்ககோரும் புகாரை நிராகரிக்கவேண்டும் - சபாநாயகரிடம் கு.க.செல்வம் விளக்கம்

    ஒருபுறம் கொரோனா பரவலும் அதிகரித்து கொண்டே இருக்க, தீபாவளி சமயத்தில் கூட்ட நெரிசலில் பயணிகள் சிக்குவதற்கு இடமளிக்காமல் கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Indian Railways, Special trains

    அடுத்த செய்தி