‘செவ்வாய் கிரகத்தில் சிக்கினாலும் மீட்க வருவோம்’- சுஷ்மா ஸ்வராஜின் சாதனை வரலாறு!

மக்களவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் எனப் பல பெருமைகளையும் கொண்டவர் சுஷ்மா.

Web Desk | news18
Updated: August 7, 2019, 6:34 PM IST
‘செவ்வாய் கிரகத்தில் சிக்கினாலும் மீட்க வருவோம்’- சுஷ்மா ஸ்வராஜின் சாதனை வரலாறு!
சுஷ்மா ஸ்வராஜ் (கோப்புப்படம்)
Web Desk | news18
Updated: August 7, 2019, 6:34 PM IST
இந்திய அமைச்சரவை கண்டறியாத நவயுக அமைச்சர் மட்டுமல்லா மக்களுக்கான அமைச்சராகவும் அடையாளப்படுத்தப்படுபவர் மறைந்த முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.

நேற்று இரவு மாரடைப்பின் காரணமாக சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார் சுஷ்மா. சுஷ்மாவுக்குப் பதில் ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற போது சுஷ்மாவை எந்த அளவு மக்கள் ‘மிஸ்’ செய்தனர் என்பதை ட்விட்டர்வாசிகள் வெளிப்படுத்தினர்.

பல சரித்திர சாதனைகளையும் செய்தவர்தான் இந்த சுஷ்மா ஸ்வராஜ். மிகவும் இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்தவர் இந்திரா காந்திக்குப் பின் அதிகப் புகழை சம்பாதித்த இந்தியப் பெண் அரசியல் தலைவர் ஆவார்.இந்திரா காந்திக்குப் பின் வெளியுறவுத்துறையக் கையில் எடுத்தப் பெண் தலைவரும் இவர்தான். ஹரியாணா மாநில அரசில் மிகவும் இளம் பெண் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் இதுவரை 7 முறை எம்.பி ஆகவும் 3 முறை எம்.எல்.ஏ ஆகவும் பதவி வகித்துள்ளார்.


டெல்லியின் முதல் பெண் முதல்வர், தேசியக் கட்சி ஒன்றின் முதல் பெண் செய்தித் தொடர்பாளர், முதல் முழுநேர பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், மக்களவையின் முதல் பெண் எதிர்கட்சித் தலைவர் எனப் பல பெருமைகளையும் கொண்டவர் சுஷ்மா.

கடந்த மக்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பதிவியில் சுஷ்மா இருந்தபோது சமூக வலைதளங்களில் மிகவும் துடிப்புடன் செயல்பட்டு வந்தார். ஆன்லைனில் உதவி எனக் கேட்டாலே போதும் எனக் கூறுபவர் ‘செவ்வாய் கிரகத்தில் மாட்டிக்கொண்டாலும் இந்திய வெளியுறவுத் துறை உங்களை வந்து மீட்கும்’ என வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு ஊக்கமளித்தவர் சுஷ்மா.

மேலும் பார்க்க: சுஷ்மா சுவராஜ் - கடந்து வந்த பாதை...

Loading...

First published: August 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...