ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரசாந்த் கிஷோர் போட்ட ஒரே ட்வீட்- ஆடிப்போன காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர் போட்ட ஒரே ட்வீட்- ஆடிப்போன காங்கிரஸ்

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் விவசாயிகள் பலியான சம்பவத்தையடுத்தே மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து செயல்படும் தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் லக்கிம்பூர் விவசாயிகள் பலியான சம்பவத்தையடுத்தே மக்கள் காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோருக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படுவதாக உள்ளது, இதற்கு கட்சியில் எதிர்ப்பும் ஆதரவுமாக கலவையான எதிர்வினைகள் இருந்து வரும் சூழ்நிலையில் லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகு பாஜக செல்வாக்கு சரிகிறது, என்ற கோணத்தில் இந்தச் சம்பவத்திற்குப் பிறகே பழம்பெரும் கட்சியான காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பழம்பெரும் கட்சி உடனடியாக எழும்புவது கடினம் என்கிற தொனியில் பிரசாந்த் கிஷோர், தன் ட்விட்டர் பக்கத்தில், “லக்கிம்பூர் சம்பவத்துக்குப்பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்சனைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை” என்று பதிவிட்டுள்ளார். கோவா காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான லூயிசினோ பெலேரோ கட்சியிலிருந்து விலகியது குறித்து பிரசாந்த் கிஷோர் அவரை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைத்தது பெரிய சர்ச்சையை எழுப்பியது. இப்போது காங்கிரஸின் பிரச்சனைகளை ஆழமானது, தீர்வு இல்லை என்று கூறியிருக்கிறார். இதனால் காங்கிரஸ் கட்சி கொஞ்சம் கிடுகிடுத்துப் போயுள்ளது.

விவசாயிகள் விவகாரத்தில் பாஜக கட்சியில் சிலர் கடுமையான நிலைப்பாடுகள் எடுத்து வருகின்றனர், உதாரணமாக ஹரியாணா முதல்வர் கட்டார், மிகவும் வன்முறையைத் தூண்டும் விதமாக பாஜக விவசாயப்பிரிவினர் தடியை கையில் எடுத்து விவசாயிகளை ஒடுக்க வேண்டும் என்கிறார்.

கட்டார் கருத்து தனிப்பட்ட கருத்தல்ல, அது பாஜகவின் நிலைப்பாடாகவே பார்க்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும் விவசாய அமைப்புகளும் சொல்லி வருகின்றன. லக்கிம்பூர் விவகாரத்தை கையாண்ட விதத்தில் யோகி ஆதித்யநாத் மீது உ.பி. யில் சாமானிய மக்களின் அதிருப்தி அதிகரித்து வருகிறது என்று அங்கு அரைச்யல் நோக்கர்கள் கருதுகின்றனர், இதைத்தான் பிரசாந்த் கிஷோர் கருத்தும் பிரதிபலிக்கிறது என்று உத்தரப் பிரதேச காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

First published:

Tags: Prashant Kishor