ஹோம் /நியூஸ் /இந்தியா /

மத்திய அரசின் மீது மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது, நேரம் வரும்போது திருப்பி அடிப்பார்கள்: ப.சிதம்பரம் கருத்து

மத்திய அரசின் மீது மக்களின் கோபம் அதிகரித்து வருகிறது, நேரம் வரும்போது திருப்பி அடிப்பார்கள்: ப.சிதம்பரம் கருத்து

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

மக்கள் இந்த மத்திய அரசைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோபம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மத்திய அரசை மக்கள் திருப்பி அடிப்பார்கள், என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ப.சிதம்பரம் ட்விட்டரில், “மத்திய அரசு கொண்டு வந்த பேரழிவு வரும் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் போராட்டம் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ஆனால், விவசாயிகள் போராட்டத்தை தங்களுக்குச் சார்பாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.

  மத்திய அரசு புதிய திருப்பமாக, கொரோனா வைரஸ் காலத்துக்கு மத்தியிலும் போராட்டம் நடத்தப்படுவது சரியானது அல்ல என்று தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காலத்திலும் அழிவுதரக்கூடிய வேளாண் சட்டங்கள் நீண்டகாலமாக இருப்பது சரியல்ல என்று பதிலடி கொடுப்போம்.

  மக்களின் சேவகனாக மத்திய அரசு இருந்தால், பொதுமக்கள் கருத்தைக் கேட்க வேண்டும், வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதிதாக ஆலோசனைகள் நடத்த வேண்டும்” எனத் தெரிவி்த்துள்ளார்.

  ப.சிதம்பரம் மற்றொரு ட்விட்டர் பதிவில் தடுப்பூசி குறித்து மத்திய அரசு வெளியிட்டு வரும் கணக்கீடு குறித்து விமர்சிக்கும் போது, “ஆங்கில நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தி உண்மையென்றால் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் தடுப்பூசி உற்பத்திக்கும், உண்மையான சப்ளை அளவுக்கும் இடைவெளி இருக்கிறது.

  மாநில அரசுகளிடம் மிகப்பெரிய அளவில் தடுப்பூசி இருப்பு இருப்பதாக மத்திய அரசு பொய்கூறி வருகிறது. ஆனால் பல மாநில அரசுகள் கூறுவது என்னவென்றால், தங்களிடம் தடூப்பூசி இருப்பு இல்லை என்கிறார்கள். இதில் யார் பொய் உரைக்கிறார்கள்?

  கொரோனா தடுப்பூசி தயாரிப்பு மற்றும் சப்ளை குறித்து தவறான எண்ணிக்கையை உள்நாட்டு மருந்து நிறுவனங்கள் வெளியிடும் செயலுக்கு மத்திய அரசு உடன்படுகிறதா? மக்கள்தான் துரதிர்ஷ்டமாக பலியாகிறார்கள். மக்கள் இதை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் கோபம் அதிகரித்து வருகிறது. சரியான நேரத்தில் மத்திய அரசை மக்கள் திருப்பி அடிப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

  ஆங்கில நாளேடு ஒன்று கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் அளவுக்கும் போடப்படும் எண்ணிக்கைக்குமான வேறுபாட்டை, இடைவெளியை கேள்விக்குட்படுத்தி மீதி வாக்சின்கள் எங்குதான் செல்கின்றன? என்று கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

  Published by:Muthukumar
  First published:

  Tags: Corona Vaccine, Farm laws, Farmer protest, Modi, P.chidambaram