மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர்- புலம்புகிறார் சித்தராமையா

news18
Updated: June 13, 2018, 7:20 PM IST
மக்கள் என்னை முட்டாளாக்கி விட்டனர்- புலம்புகிறார் சித்தராமையா
சித்தராமையா
news18
Updated: June 13, 2018, 7:20 PM IST
கர்நாடக மக்கள் தன்னை முட்டாளாக்கி விட்டதாக அம்மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா புலம்பித் தீர்த்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையா தோல்வி அடைந்தார். எனினும், பதாமி தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். வருணா தொகுதியில் போட்டியிட்ட சித்தராமையாவின் மகன் யதீந்திரா  வெற்றி பெற்றார்.

இந்நிலையில், மைசூரு மாவட்டத்துக்கு சென்ற சித்தராமையா வருணா தொகுதி வாக்காளர்களை சந்தித்து தனது மகனை வெற்றி பெற வைத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

அப்போது, அவர் தனது ஆதரவாளர்களிடம் கூறியதாவது:

மக்கள் என்னை முட்டாளாக்கிவிட்டனர். இதுவே போதும். நான் வருணா தொகுதியில் போட்டியிட்டிருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருப்பேன். 2008-ஆம் ஆண்டு வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானேன். 2013-இல் முதல்வரானேன்.

கடந்த முறை சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வருணா தொகுதியில் வெற்றி பெற்றேன். இந்த முறை, அங்கு எனது மகன் யதீந்திரா சுமார் 58,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வருணா தொகுதி மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 40 வருடங்களாக நான் அரசியலில் உள்ளேன். கர்நாடகாவில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளேன். முதல்வராக இருந்தபோது லஞ்ச, ஊழலற்ற அரசை அளித்தேன். ஏழை, எளிய மக்களின் நலனுக்காகவே பாடுபட்டேன்.
Loading...
கர்நாடகாவில் யாருமே பசியால் வாடக்கூடாது என்பதற்காக அன்னபாக்யா என்னும் திட்டத்தை அமல்படுத்தினேன். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 4 கோடி பேருக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது. பாஜக ஆட்சி செய்யும் எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமலில் இல்லை.

மக்கள் எங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என நினைத்தேன். ஆனால், எனது எண்ணம் நிறைவேறவில்லை. அம்பேத்கர், இந்திரா காந்தி போன்ற பெரிய தலைவர்களே மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர் .

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
First published: June 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...