ஹோம் /நியூஸ் /இந்தியா /

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 கோடி இலவச உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன- பியூஷ் கோயல்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 கோடி இலவச உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன- பியூஷ் கோயல்

அமைச்சர் பியூஸ் கோயல்

அமைச்சர் பியூஸ் கோயல்

லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது அதனை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லையென்றால் விபரீத விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவிக்கவில்லை எனில் விபரீத விளைவுகளைத்தான் சந்தித்திருப்போம் அதனால் அது குறித்த விமர்சனங்கள் எவ்வளவு தவறு என்பது இப்போது புரிந்திருக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

  புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 கோடி இலவச உணவும் தண்ணீர் பாட்டில்கலும் வழங்கப்பட்டுள்ளன என்றார் பியூஷ் கோயல்.

  புலம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒருபங்கு கட்டுமானத் தொழிலாளர்கள், இதற்கு அடுத்து விவசாயக் கூலித் தொழிலாளர்களாக 20 சதவிகிதம் பேர் பணியாற்றுகிறார்கள். இதற்கு அடுத்துதான் உற்பத்தித்துறையே வருகிறது. 2016-ம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 62.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை புலம்பெயர்த் தொழிலாளர்களின் பணப்பரிவர்த்தனை (Indian remittances) நிகழ்ந்து இந்தியாதான் உலக அளவிலான பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது. சர்வதேச அளவில் இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களால் கிடைக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் 2015-ம் ஆண்டின்படி 9.4 சதவிகிதம். புலம்பெயர் தொழிலாளரக்ள் பலர் லாக்டவுனினால் வேலை இழந்தனர் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

   இந்நிலையில் மக்களவையில் பியூஷ் கோயல் கூறியதாவது:

  லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது அதனை பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். ஆனால் முழு ஊரடங்கு அமல்படுத்தவில்லையென்றால் விபரீத விளைவுகள் தான் ஏற்பட்டிருக்கும். ரயில்களை முழுமையாக இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் விடுத்தனர்.

  ஆனால் கரோனா பரவலை கருத்தில் கொண்டு மட்டுமே இ்ந்த விஷயத்தில் முடிவெடுக்கப்படும். ரயில் சேவை தொடர்ந்து இயக்கியிருந்தால் கரோனா வைரஸ் பரவல் நாடுமுழுவதும் வேகமாக அதிகரித்து இருக்கும்.

  ரயில் போக்குவரத்தை நிறுத்தியது கரோனா பரவலை தடுக்கவே. அதேசமயம் பல மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டபோது அவர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்வே முழு அளவில் ரயில்களை இயக்கியது. ரயில்கள் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 2 கோடி இலவச உணவும், தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டுள்ளன.

  இவ்வாறு கூறினார் பியூஷ் கோயல்.

  கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

  பிரதமர் மோடி , மாநில முதல்வர்களுடன் கொரோனா குறித்து விவாதிக்கவுள்ளார்.

  Published by:Muthukumar
  First published:

  Tags: BJP, Indian Railways, Piyush Goyal