ஹோம் /நியூஸ் /இந்தியா /

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்.. கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய மக்கள்

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டிய ஆசிரியர்.. கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய மக்கள்

ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த மக்கள்

ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்த மக்கள்

பாலியல் புகார் குறித்து அதிகாரிகள் தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரத்தில் பொதுமக்கள் ஆசிரியரை சிறைபிடித்து தாக்கி கருப்பு மை பூசியுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jharkhand, India

  ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச படம் காட்டி, அவருக்கு அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம் கூட்டிவந்து கிராமத்தினர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

  ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள மேற்கு சிங்பம் மாவட்டத்தில் உள்ள நவ்முண்டி கிராமத்தில் நடுநிலைப் பள்ளியில் துகாராம் என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளியில் பயின்று வரும் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார்.இந்த மாணவிகளிடம் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டும், தனது செல்போனில் இருந்த ஆபாச படங்களை காட்டியும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

  இதையும் படிங்க: 67 ஆபாச இணையதளங்கள் முடக்கம்.. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

  மாணவிகளின் புகாரை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதி காவல்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஆத்திரத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி கடந்த புதன்கிழமை ஆசிரியரை பள்ளியில் வைத்தே சிறைபிடித்து கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன் முகத்தில் கருப்பு மை பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஆசிரியரை ஊர் முழுக்க ஊர்வலமாக சுற்றி வர வைத்துள்ளனர்.

  விஷயம் காவல்துறையின் காதுகளுக்கு சென்றதும், சம்பவயிடத்திற்கு விரைந்த காவலர்கள் ஊர்மக்களிடம் இருந்து ஆசிரியரை மீட்டனர். தொடர்ந்து ஆசிரியர் துக்காராம் மீது வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jharkhand, Porn websites, Teacher