வடமாநிலங்களில் அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம்...!

வடமாநிலங்களில் அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம்...!
கோப்புப் படம்
  • Share this:
வடமாநிலங்களில் அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பொதுமக்கள் இரவு 9 மணிமுதல் 9 நிமிடங்களுக்கு மின் விளக்கு அணைத்து அகல் விளக்கு ஏற்ற வேண்டும் என்றும் அதன்மூலம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை காட்டுவோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

Also read... பாஜக நிறுவன தினத்துக்காக விளக்கேற்றச் சொல்வதா? கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி கேள்வி


இதைத் தொடர்ந்து வடமாநிலங்களில் அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பீகார் மாநிலம் பாட்னாவில் சாலையோரமாக விற்கப்படும் அகல் விளக்குகளை மக்கள் வாங்கிச் சென்றனர்.

இதே போல, உத்தரபிரதேச மாநிலம் மீரட்டிலும் வண்ண அகல் விளக்குகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். தனிமனித இடைவெளியை பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களுக்கு அகல் விளக்கு விற்பனையாளர்கள் அறிவுறுத்தினர். இதற்கிடையே, நான் விளக்கை ஏற்ற மாட்டேன் என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் இந்தியாவில் முதல் இடத்தில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

Also see...
First published: April 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading