முகப்பு /செய்தி /இந்தியா / வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி - நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கொடி ஏற்றி கொண்டாட்டம்

வீடுகள் தோறும் மூவர்ணக் கொடி - நாடு முழுவதும் மக்கள் ஆர்வத்துடன் கொடி ஏற்றி கொண்டாட்டம்

சுதந்திர தினம்

சுதந்திர தினம்

Har Ghar Tiranga:பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பாகங்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் மக்கள் ஆர்வத்துடன் தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திர தின அமுதப் பெருவிழா என்று மத்திய அரசு கொண்டாடிவருகிறது. இந்த நிலையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் நேற்று காலை முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது.

மேலும், அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி இயக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக harghartiranga.com என்ற இணையதளத்தை அரசு உருவாக்கியுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றப்பட்ட கொடியுடன் புகைப்படம் எடுத்து அதை இந்த இணையதளத்திலும் சமூக வலைத்தளத்திலும் அப்லோட் செய்யுங்கள் எனக் கோரிக்கை வைத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

இதைத் தொடர்ந்து பல்வேறு மக்கள் தங்கள் வீட்டு தேசிய கொடியுடன் புகைப்படம் எடுத்து #HarGharTiranga என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 5,885 பேரை மைதானத்தில் நிற்க வைத்து மிகப்பெரிய தேசிய கொடி உருவத்தை உருவாக்கி சண்டிகர் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி அந்த புகைப்படங்கள், காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல், பல்வேறு முன்னணி பாஜக தலைவர்கள், பாஜகவை சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்கள் சிறப்பு பொது நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பாஜக மட்டுமல்லாது காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற கட்சிகளும் தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தேசிய கொடி இயக்கத்தை தங்கள் தொண்டர்கள், பொது மக்களை கொண்டு நடத்தி 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் தயாரிக்கப்பட்டுள்ள 140 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட தேசியக்கொடி!

நடிகர் ரஜினிகாந்த், விஜய், மோகன்லால், ஆமிர்கான்  போன்ற திரை பிரபலங்களும் தங்கள் வீட்டில் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். தனது அழைப்பை ஏற்று இந்திய மக்கள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசிய கொடியை ஏற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை தருவதாக பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Independence day, PM Narendra Modi