வீடியோ ஆதாரம்; 40 சாட்சிகள்! பெஹ்லூ கானைக் கும்பல் தாக்கி கொன்ற வழக்கில் அனைவரும் விடுதலை

பால் வியாபாரத்துக்காக மாடு வாங்கியிருப்பதாக கூறி மாடு வாங்கியதற்காக ரசீதை பெஹ்லூ கான் காட்டிய நிலையிலும் விடாமல் தாக்கினர் பசுக் குண்டர்கள். கட்டை மற்றும் கம்பியைக் கொண்டு கடுமையாகத் தாக்கியதில் பெஹ்லூ கான் உயிரிழந்தார்.

வீடியோ ஆதாரம்; 40 சாட்சிகள்! பெஹ்லூ கானைக் கும்பல் தாக்கி கொன்ற வழக்கில் அனைவரும் விடுதலை
பெஹ்லூ கான்
  • News18
  • Last Updated: August 14, 2019, 6:28 PM IST
  • Share this:
ராஜஸ்தான் மாநிலத்தில் மாடு வாங்கிச் சென்ற பெஹ்லூ கான் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுவித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பெஹ்லூ கான், 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரம்ஜானை முன்னிட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மாடு வாங்கியிருந்தார். வாங்கிய மாட்டை வண்டியில் ஏற்றிக் கொண்டுவரும்போதும், பசுக் குண்டர்கள் வாகனத்தை வழிமறித்தனர்.

பசு இறைச்சிக்காக கொண்டு செல்வதாக கூறி பெஹ்லூ கானை கடுமையாகத் தாக்கினர். பால் வியாபாரத்துக்காக மாடு வாங்கியிருப்பதாக கூறி மாடு வாங்கியதற்காக ரசீதை பெஹ்லூ கான் காட்டிய நிலையிலும் விடாமல் தாக்கினர் பசுக் குண்டர்கள். கட்டை மற்றும் கம்பியைக் கொண்டு கடுமையாகத் தாக்கியதில் பெஹ்லூ கான் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


இதுதொடர்பான வழக்கு ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் இரண்டு பேர் சிறார்கள். குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார்.

ஆகஸ்ட் 7-ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவு பெற்றது. இந்த வழக்கு தொடர்பாக 40 பேர் சாட்சியமளித்திருந்தனர். 40 பேரில் இரண்டு பேர் பெஹ்லூ கானின் மகன்கள். சம்பவம் நடைபெற்றபோது அவர்கள் இருவரும் உடனிருந்தனர். பெஹ்லூ கானை கும்பலாகத் தாக்கியச் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலானது.

அந்த வீடியோவும் நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டது. இந்தச் சாட்சிகளின் அடிப்படையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், வீடியோ ஆதாரம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை’ என்று தெரிவித்தது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று பெஹ்லூ கான் ஊரைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

Loading...

Also see:

First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...