Home /News /national /

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம்.. உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்!

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் உளவு மென் பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    பெகாசஸ் உளவு மென்பொருளை இந்தியா வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், அரசியலமைப்புப் பதவியில் இருப்போர், தொழிலதிபர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் செல்போன்கள் இந்த மென்பொருள் மூலம் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் செய்த அமளியில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் முடங்க, உச்ச நீதிமன்றத்தால் 3 பேர் கொண்ட தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விவகாரம் இப்போது மீண்டும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்த வாய்ப்பு... அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

    அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள புதிய செய்திக் கட்டுரை இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற காரணமாக அமைந்துள்ளது. 'இந்தியா, இஸ்ரேல் இடையே 2017-இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் பெகாசஸ் உளவு மென்பொருள் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்ததாக புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    அதில், "2017ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்தின்போது அவரும் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகுவும் பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதில், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் நுண்ணறிவு தொடர்புடைய ஒப்பந்தத்துக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் பெகாசஸ் மற்றும் ஏவுகணை மையப்புள்ளியாக இருந்தன. சில மாதங்களுக்குப் பிறகு நெதன்யாகு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.

    இதன்பிறகு, 2019 ஜூன் மாதத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாலஸ்தீனிய மனித உரிமை அமைப்பு ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலில் பார்வையாளராக இணைவதற்கு எதிராக இந்தியா வாக்களித்தது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், பெகாசஸ் உளவு மென் பொருள் வாங்கியது குறித்து விசாரணை நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

    மேலும் படிக்க...  ஒரு காலத்தில் என்சிசியில் தீவிர உறுப்பினராக இருந்தேன்.. பிரதமர் மோடி பெருமிதம்!

    அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியா-இஸ்ரேல் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை, எனவே ரத்து செய்து பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கிரிமினல் வழக்கைப் பதிவு செய்வதற்கும், பெகாசஸ் மென்பொருள் கொள்முதல் ஒப்பந்தம் மற்றும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒப்பந்தத்தை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Central govt, Supreme court

    அடுத்த செய்தி